Home / அறிவியல் CITY / RADIOTAMIZHA | வரலாற்றில் இன்று

RADIOTAMIZHA | வரலாற்றில் இன்று

நிகழ்வுகள்

1834 – இலங்கை, கொழும்பு நகரில் புறக்கோட்டை, கோட்டை பகுதிகளில் காணிகளை வாங்க தமிழருக்கும், சோனகருக்கும் அனுமதி வழங்கப்பட்டது
1839 – சீனாவில் பிரித்தானிய வணிகர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட 1.2 மில்லியன் கிகி அபினியை லின் சீசு அழித்தார். முதலாம் அபினிப் போர் ஆரம்பமானது.
1861 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: மேற்கு வர்ஜீனியாவில் பிலிப்பி நகரில் இடம்பெற்ற சமரில் அமெரிக்கக் கூட்டணியின் படைகள் கூட்டமைப்பின் படைகளைத் தோற்கடித்தன.
1916 – ஐக்கிய அமெரிக்காவின் காவற்படையில் மேலும் 450,000 ஆண்களை சேவைக்கு அமர்த்த சட்டமூலம் கொண்டு வரப்பட்டது.
1940 – இரண்டாம் உலகப் போர்: செருமனியின் வான்படை பாரிசு நகரில் குண்டுகளை வீசின.
1940 – இரண்டாம் உலகப் போர்: பிரான்சின் டன்கிர்க் நகரில் இடம்பெற்ற போரில் செருமனியப் படைகள் வெற்றி பெற்றன. நட்பு அணி முழுமையாகப் பின்வாங்கியது.
1941 – இரண்டாம் உலகப் போர்: நாட்சி செருமன் படைகள் காண்டானசு என்ற கிரேக்கக் கிராமத்தை அடியோடு அழித்து, 180 கிராமத்தவரைப் படுகொலை செய்தனர்.
1950 – பிரான்சின் எர்சொக், லாச்சினால் ஆகியோர் 8,091 மீட்டர் உயரமான அன்னபூர்ணா 1 மலையின் உச்சியை அடைந்த முதலாவது மனிதர் என்ற சாதனையைப் படைத்தனர்.
1962 – ஏர் பிரான்சு போயிங் விமானம் பாரிசில் விபத்துக்குள்ளாகியதில் 130 பேர் உயிரிழந்தனர்.
1963 – தெற்கு வியட்நாமில் பௌத்தர்கள் நடத்திய போராட்டம் இராணுவத்தினரால் வேதித் தாக்குதல் நடத்தி முறியடிக்கப்பட்டது. 67 பேர் காயமடைந்தனர்.
1965 – நாசாவின் ஜெமினி 4 விண்கலம் ஏவப்பட்டது. எட்வேர்ட் வைட் 21 நிமிடங்கள் விண்ணில் நடந்து சாதனை படைத்தார். இவரே விண்ணில் நடந்த முதலாவது அமெரிக்கர் ஆவார்.
1969 – தெற்கு வியட்நாமில் மெல்பேர்ன் என்ற ஆத்திரேலியப் போர்க்கப்பல் ”எவான்ஸ்” என்ற அமெரிக்கப் போர்க்கப்பலுடன் மோதி அதை இரண்டாகப் பிளந்தது.
1973 – சோவியத் சூப்பர்சோனிக் டியூ-144 வானூர்தி பிரான்சில் விபத்துக்குள்ளாகி வீழ்ந்ததில் 14 பேர் உயிரிழந்தனர்.
1979 – தெற்கு மெக்சிகோ வளைகுடாவில் எண்ணெய்க் கிணறு ஒன்றில் எண்ணெய்க் கசிவு ஏற்பட்டதில் 3,000,000 பீப்பாய்கள் கடலில் கலந்தது.
1980 – விடுதலைச் சிலை அருகே குண்டு ஒன்று வெடிக்கப்பட்டது. குரோவாசியா தேசியவாதிகள் இதனை வெடிக்க வைத்திருக்கலாம் எனச் சந்தேகிக்கப்பட்டது.
1982 – ஐக்கிய இராச்சியத்துக்கான இசுரேலியத் தூதர் சுலோமோ அர்கோவ் இலண்டனில் சுட்டுக் காயப்படுத்தப்பட்டார்.
1984 – புளூஸ்டார் நடவடிக்கை: அம்ரித்சரில் சீக்கியர்களின் புனிதப் பொற்கோயிலுள் இந்திய இராணுவத்தினர் புகுந்தனர். சூன் 6 வரை இடம்பெற்ற இந்நடவடிக்கையில் 5,000 இற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.
1989 – சீனாவில் தியனன்மென் சதுக்கத்தில் ஏழு வாரங்களாக இடம்பெற்று வந்த ஆர்ப்பாட்டங்களைக் கலைக்க அங்கு சீன இராணுவத்தினர் அனுப்பப்பட்டனர்.
1991 – சப்பானில் கியூசுவில் உன்சென் மலை வெடித்ததில் 43 பேர் உயிரிழந்தனர். கொல்லப்பட்டவர்கள் அனைவரும் ஆய்வாளர்களும் ஊடகவியலாளர்களும் ஆவார்.
1992 – ஆத்திரேலியாவில் எடி மாபோ தாக்கல் செய்த மாபோ எதிர் குயின்ஸ்லாந்து வழக்கின் தீர்ப்பின் படி, பழங்குடியினரின் நிலங்களின் உரிமையை அவர்களுக்கே திரும்ப வழங்கப்பட்டது.
1998 – செருமனியில் கடுகதி தொடருந்து ஒன்று பாதையை விட்டு விலகியதில் 101 பேர் கொல்லப்பட்டனர்.
2006 – மொண்டெனேகுரோ செர்பியா-மொண்டெனேகுரோ கூட்டமைப்பில் இருந்து பிரிந்தது.
2007 – விசாரணைக்காகக் கைது செய்யப்பட்ட இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு தமிழ்ப் பணியாளர்கள் கொழும்பில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
2007 – தெற்கு சீனாவில் யுனான் பகுதியில் இடம்பெற்ற 6.4 அளவு நிலநடுக்கத்தில் பலர் கொல்லப்பட்டுப் பலத்த சேதம் ஏற்பட்டது.
2012 – லாகோஸ் நகரில் 153 பேரை ஏற்றிச் சென்ற விமானம் ஒன்று வீழ்ந்ததில் அதில் பயணம் செய்த அனைவரும், தரையில் 10 பேரும் உயிரிழந்தனர்.
2013 – அமெரிக்க இராணுவ வீரர் பிராட்லி மானிங் விக்கிலீக்ஸ் நிறுவனத்திற்கு இரகசியத் தகவல்களைக் கசிந்தமைக்காகக் குற்றம் சாட்டப்பட்டு இராணுவ விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.
2013 – வடகிழக்கு சீனாவில் சிலின் மாகாணத்தில் கோழிப் பண்ணை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 119 பேர் உயிரிழந்தனர்.
2015 – கானா, அக்ரா நகரில் பெட்ரோல் நிலையம் ஒன்றில் ஏற்பட்ட வெடிப்பில் 200 பேர் உயிரிழந்தனர்.
2017 – இலண்டன் பாலத்தில் இசுலாமியத் தீவிரவாதிகளால் நடத்தப்பட்ட தாக்குதலில் 8 பேர் கொல்லப்பட்டனர், பலர் காயமடைந்தனர். மூன்று தீவிரவாதிகள் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
2019 – சூடானில் கர்த்தூம் நகரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது அரசுப் படைகள் சுட்டதில் 100 இற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.

பிறப்புகள்

1873 – ஒட்டோ லோவி, நோபல் பரிசு பெற்ற செருமானிய-அமெரிக்க மருந்தியலாளர், உயிரியலாளர் (இ. 1961)
1900 – அடிலைடே அமெசு, அமெரிக்க வானியலாளர் (இ. 1932)
1924 – மு. கருணாநிதி, தமிழ்நாட்டின் 3-வது முதலமைச்சர், தமிழறிஞர், எழுத்தாளர் (இ. 2018)
1929 – சிமன்பாய் படேல், இந்திய அரசியல்வாதி (இ. 1994)
1930 – ஜார்ஜ் பெர்னாண்டஸ், இந்திய அரசியல்வாதி (இ. 2019)
1931 – ராவுல் காஸ்ட்ரோ, கியூபாவின் 18வது அரசுத்தலைவர்
1961 – லோறன்ஸ் லெசிக், அமெரிக்க நூலாசிரியர், படைப்பாக்கப் பொதுமங்களின் நிறுவனர்
1966 – ராதா, தென்னிந்தியத் திரைப்பட நடிகை
1966 – வசீம் அக்ரம், பாக்கித்தானியத் துடுப்பாளர்
1966 – தங்கம் தென்னரசு, தமிழக அரசியல்வாதி
1986 – ரஃபேல் நடால், எசுப்பானிய டென்னிசு வீரர்

இறப்புகள்

1963 – இருபத்திமூன்றாம் யோவான் (திருத்தந்தை) (பி. 1881)
1977 – ஆர்ச்சிபால்ட் ஹில், நோபல் பரிசு பெற்ற ஆங்கிலேய மருத்துவர் (பி. 1886)
1989 – ரூகொல்லா கொமெய்னி, ஈரானின் 1வது அரசுத்தலைவர், ஆன்மிகத் தலைவர் (பி. 1902)
1990 – ராபர்ட் நாய்சு, இன்டெல் நிறுவனத்தை நிறுவிய அமெரிக்க தொழிலதிபர், இயற்பியலாளர் (பி. 1927)
2000 – ஜெய்சங்கர், தமிழ்த் திரைப்பட நடிகர் (பி. 1938)
2009 – இரா. திருமுருகன், தமிழறிஞர் (பி. 1929)
2010 – விளாதிமிர் ஆர்னோல்டு, உருசியக் கணிதவியலாளர் (பி. 1937)
2011 – பஜன்லால், அரியாணாவின் 6வது முதலைமைச்சர் (பி. 1930)
2013 – ஜியா கான், அமெரிக்க-இந்திய நடிகை (பி. 1988)
2013 – அதுல் சிட்னிஸ், செருமானிய-இந்திய ஊடகவியலாளர் (பி. 1962)
2014 – கோபிநாத் முண்டே, இந்திய-மகராட்டிர அரசியல்வாதி (பி. 1949)
2016 – முகம்மது அலி, அமெரிக்க குத்துச் சண்டை வீரர் (பி. 1942)
2016 – பாலு ஆனந்த், தென்னிந்தியத் திரைப்பட இயக்குநர், நடிகர்

சிறப்பு நாள்
மாவீரர் நாள் (உகாண்டா)
மாபோ நாள் (ஆத்திரேலியா)
உலக மிதிவண்டி நாள்

About இனியவன்

x

Check Also

RADIOTAMIZHA |வரலாற்றில் இன்று

நிகழ்வுகள் 1817 – ஆரம்பகால மிதிவண்டி, டான்டி குதிரை, கார்ல் வொன் டிராயிசு என்பவரால் இயக்கப்பட்டது. 1830 – 34,000 ...