Home / உள்நாட்டு செய்திகள் / RADIOTAMIZHA | நாட்டின் பல மாவட்டங்களில் மக்களின் குடிநீர் பிரச்சினைக்கு ஜனாதிபதி எடுத்துள்ள தீர்மானம்

RADIOTAMIZHA | நாட்டின் பல மாவட்டங்களில் மக்களின் குடிநீர் பிரச்சினைக்கு ஜனாதிபதி எடுத்துள்ள தீர்மானம்

நாட்டின் பல மாவட்டங்களில் மக்கள் முகங்கொடுத்து வருகின்ற குடிநீர் பிரச்சினையை தீர்ப்பதற்கு இந்தமுறை பாதீட்டில் நிதி ஒதுக்கப்படுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

பதுளையில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துக்கொண்டு அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

கடந்த சில தினங்களில் ஜனாதிபதி நாடு பூராகவும் மேற்கொண்ட பயணங்களின் போது மக்கள் முன்வைத்த குடிநீர் பிரச்சினைக்கு அமைவாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிரதான பிரச்சினை குடிநீரின் அவசியமாகும்.

பிரதமர் மஹிந்த ராஜபக்சவுடன் இந்த பிரச்சினை தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

அதனடிப்படையில் மிக முக்கிய தேவையாக கருதி குடிநீர் பிரச்சினையை தீர்ப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

About அகமுகிலன்

x

Check Also

RADIOTAMIZHA | பொதுத்தேர்தல் 2020 – யாழ்ப்பாணம் – நல்லூர் தேர்தல் முடிவு

இலங்கைத் தமிழரசுக் கட்சி 5803 2458% ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி 4700 19.91% அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 4158 ...