Home / இந்திய செய்திகள் / RADIOTAMIZHA | நகராட்சி பெண்கள் கழிப்பறை சுத்தம் செய்த ம.பி., அமைச்சர்

RADIOTAMIZHA | நகராட்சி பெண்கள் கழிப்பறை சுத்தம் செய்த ம.பி., அமைச்சர்

ம.பி.,யில், நகராட்சி அலுவலக பெண்கள் கழிப்பறையை, சுத்தம் செய்யும் பணிகளை, அம்மாநில அமைச்சர், பிரதியுமான் சிங் தோமர் மேற்கொண்டார்.ம.பி.,யில், முதல்வர், சிவராஜ் சிங் சவுகான் தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இம்மாநில எரிசக்தி துறை அமைச்சர், பிரதியுமான் சிங் தோமர், நேற்று, குவாலியரில் உள்ள நகராட்சி கமிஷனர் அலுவலகத்திற்கு சென்றார்.

அவரிடம், சில பெண் ஊழியர்கள், அங்குள்ள கழிப்பறைகள் சுகாதாரமின்றி இருப்பதாக புகார் கூறினர். அந்த கழிப்பறையை பார்வையிட்ட அமைச்சர் பிரதியுமான் சிங், அதை சுத்தம் செய்வதற்கான பொருட்களை தரும்படி, அதிகாரிகளிடம் கேட்டார். அவைகளை வைத்து அமைச்சர் கழிப்பறையை சுத்தம் செய்தார். இது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

நகராட்சி பெண்கள் கழிப்பறை சுத்தம் செய்த ம.பி., அமைச்சர்

About அகமுகிலன்

x

Check Also

RADIOTAMIZHA | சென்னையின் பல்வேறு பகுதிகளில் விடிய விடிய பெய்த கனமழை

சென்னையின் பல்வேறு பகுதிகளில் விடிய விடிய கனமழை பெய்தது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் சில மாவட்டங்களில் மழை ...