Home / இந்திய செய்திகள் / RADIOTAMIZHA | தமிழ்நாட்டில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு

RADIOTAMIZHA | தமிழ்நாட்டில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு

தமிழ்நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் ஐயாயிரத்து 879 பேருக்கு வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில் தொற்று கண்டறியப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை இரண்டரை இலட்சத்தைக் கடந்துள்ளது.

இதன்படி, இதுவரையான காலப்பகுதியில் வைரஸ் தொற்று கண்டறியப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை இரண்டு இலட்சத்து 51 ஆயிரத்து 738 ஆகப் பதிவாகியுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மேலும், நேற்று (சனிக்கிழமை) ஒரேநாளில் அதிகபட்சமாக 99 பேர் உயிரிழந்துள்ளதுடன் மொத்த மரணங்கள் நான்காயிரத்தைக் கடந்துள்ளது. இதன்படி இதுவரை நான்காயிரத்து 34 பேர் மரணித்துள்ளனர்.

சென்னையில் மட்டும் ஒரேநாளில் ஆயிரத்து 74 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில் அங்கு மொத்த பாதிப்பு ஒரு இலட்சத்தைக் கடந்துள்ளது. அங்கு இதுவரை ஒரு இலட்சத்து 877 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

சென்னையை தவிர்த்து தமிழகத்தின் ஏனைய மாவட்டங்களில் மொத்தமாக நான்காயிரத்து 805 பேருக்கு வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

அத்துடன், அதிகபட்சமாக ஏழாயிரத்து 10 பேர் குணமடைந்து இன்று வீடுகளுக்குத் திரும்பியுள்ள நிலையில் தொற்றிலிருந்து மீண்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு இலட்சத்து 90 ஆயிரத்து 966 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத் துறை குறிப்பிட்டுள்ளது. தமிழகத்தில் தொடர்ந்தும் 56 ஆயிரத்து 738 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

இதேவேளை, இன்று 58 ஆயிரத்து 243 பேருக்கு கொரோனா பரிசோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன் தமிழகத்தில் தனிநபர் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை 26 இலட்சத்து18 ஆயிரத்து 512ஆக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

About அகமுகிலன்

x

Check Also

RADIOTAMIZHA | சென்னையின் பல்வேறு பகுதிகளில் விடிய விடிய பெய்த கனமழை

சென்னையின் பல்வேறு பகுதிகளில் விடிய விடிய கனமழை பெய்தது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் சில மாவட்டங்களில் மழை ...