Home / இந்திய செய்திகள் / RADIOTAMIZHA | தமிழகம் முழுவதும் இன்று முழு ஊரடங்கு

RADIOTAMIZHA | தமிழகம் முழுவதும் இன்று முழு ஊரடங்கு

தமிழகம் முழுதும், இன்று (ஆக.2) தளர்வில்லாத, முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.

தமிழகத்தில், கொரோனா நோய் பரவலை தடுக்க, வரும், 31ம் தேதி வரை, பொது ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது. பொது மக்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக, பல்வேறு தளர்வுகளையும், தமிழக அரசு அறிவித்து உள்ளது.எனினும், பொது மக்கள் கூடுவதை தடுக்க, இம்மாதம் அனைத்து ஞாயிற்றுக் கிழமையும், எவ்வித தளர்வுகளும் இல்லாத, முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இன்று மாநிலம் முழுதும், முழு அடைப்பு நடைபெறும். மருத்துவமனை, மருந்து கடைகள் தவிர, மற்ற கடைகள் எதுவும் திறக்கப்படாது; வாகனங்கள் இயங்காது.ரேஷன் கடைகள் முழு ஊரடங்கை முன்னிட்டு, இன்றும், அடுத்த வார ஞாயிற்றுக் கிழமையும், ரேஷன் கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.தமிழகத்தில், ரேஷன் கடைகளுக்கு, மாதத்தின் முதல் மற்றும் இரண்டாவது ஞாயிற்றுக் கிழமை வேலை நாள். அதற்கு மாற்றாக, அந்த வாரங்களில் வரும் வெள்ளிக்கிழமை விடுமுறை விடப்படும். வைரஸ் தொற்றை தடுக்க, தமிழக அரசு, இம்மாதத்தில் வரும் அனைத்து ஞாயிற்றுக் கிழமைகளிலும், முழு ஊரடங்கிற்கு உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து, ரேஷன் கடைகளுக்கு, இன்றும், அடுத்த வார ஞாயிற்றுக் கிழமையும் விடுமுறை விடப்பட்டுள்ளது.கார்டுதாரர்கள், எந்த தேதியில் பொருட்கள் வாங்க வர வேண்டும் என்ற விபரம் அடங்கிய, ‘டோக்கன்’ அவர்களின் வீடுகளில் வழங்கும் பணியில், ரேஷன் ஊழியர்கள் நேற்று ஈடுபட்டனர். நாளையும், நாளை மறுதினமும் டோக்கன்கள் வழங்கப்பட உள்ளன.

 

About அகமுகிலன்

x

Check Also

RADIOTAMIZHA | சென்னையின் பல்வேறு பகுதிகளில் விடிய விடிய பெய்த கனமழை

சென்னையின் பல்வேறு பகுதிகளில் விடிய விடிய கனமழை பெய்தது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் சில மாவட்டங்களில் மழை ...