Home / உள்நாட்டு செய்திகள் / RADIOTAMIZHA | கொரோனா வைரஸ் பரவல் குறித்து வீண் அச்சம் கொள்ளத்தேவையில்லை-அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி

RADIOTAMIZHA | கொரோனா வைரஸ் பரவல் குறித்து வீண் அச்சம் கொள்ளத்தேவையில்லை-அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி

கொரோனா வைரஸ் சமூக பரவலை தடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் முன்னெடுத்துள்ளதாக அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

கந்தகாடு புனர்வாழ்வு முகாமில் 339 கொரோனா வைரஸ் தொற்று நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் நாட்டு மக்கள் கொரோனா வைரஸ் பரவல் குறித்து வீண் அச்சம் கொள்ளத்தேவையில்லை என்றும் கூறினார்.

வைரஸ் பரவலை தடுக்க அரசாங்கம் முழுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது என்றும் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் சமூகத்தில் பதிவாகிய கொரோனா வைரஸ் தொற்று நோயாளிகளின் எண்ணிக்கை குறைவாகவே காணப்படுகிறது என்றும் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்தார்.

புனர்வாழ்வு முகாம்களில் வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்த போதிலும், சமூகத்தில் வைரஸ் பரவாமல் தடுக்க அரசாங்கம் முழுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

March 2020 - KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIK 

About அகமுகிலன்

x

Check Also

RADIOTAMIZHA | பொதுத்தேர்தல் 2020 – யாழ்ப்பாணம் – நல்லூர் தேர்தல் முடிவு

இலங்கைத் தமிழரசுக் கட்சி 5803 2458% ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி 4700 19.91% அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 4158 ...