Home / இன்றைய நாள் எப்படி / RADIOTAMIZHA | இன்றைய நாள் எப்படி

RADIOTAMIZHA | இன்றைய நாள் எப்படி

இன்று!
சார்வரி வருடம், வைகாசி மாதம் 21ம் தேதி, ஷவ்வால் 10ம் தேதி,
3.6.2020 புதன்கிழமை, வளர்பிறை, துவாதசி திதி காலை 7:38 வரை,
அதன்பின் திரயோதசி திதி, சுவாதி நட்சத்திரம் இரவு 7:55 வரை,
அதன்பின் விசாகம் நட்சத்திரம், சித்தயோகம்.

நல்ல நேரம் : காலை 9.00 மணி முதல் காலை 10.30 மணி வரை.
ராகு காலம் : பிற்பகல் 12.00 மணி முதல் பிற்பகல 1.30 மணி வரை.
எமகண்டம் : காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை.
குளிகை : காலை 10.30 மணி முதல் பிற்பகல் 12.00 மணி வரை.
சூலம் : வடக்கு

* பரிகாரம் : பால்
* சந்திராஷ்டமம் : உத்திரட்டாதி, ரேவதி
* பொது: முகூர்த்தநாள், பிரதோஷம், சிவன் வழிபாடு, வாஸ்து காலை 9:58 – 10:34 மணி

 

மேஷம்:  மனைவி வழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபா ரத்தில் வேலையாட்கள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். உத்தியோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்

ரிஷபம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். திடீரென்று அறிமுகமாகுபவரால் பயனடைவீர்கள். வியாபாரத்தில் சில மாற்றம் செய்வீர்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். மதிப்பு கூடும் நாள

மிதுனம்: புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். சிக்கனமாக செலவழித்து சேமிக்க தொடங்குவீர்கள். ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் உங்களின் திறமைகள் வெளிப்படும். நினைத்தது நிறை வேறும் நாள்.

கடகம்:  புது வேலை அமையும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பாகள். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள் .

சிம்மம்:  உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டு வார்கள். சொத்து பிரச்னைக்கு சுமூக தீர்வு காண்பீர்கள். வியாபாரத்தில் இரட்டிப்புலாபம் உண்டு. உத்தியோகத்தில் மேலதி காரிகள் உங்கள் கோரிக்கையை ஏற்பார்கள். பெற்றிபெறும் நாள்.

கன்னி: வாகனத்தை சீர் செய்வீர்கள். விலகி சென்ற உறவினர்கள் வலிய வந்து பேசுவார்கள். பயணங்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் லாபம் கணிசமாக உயரும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். புதிய பாதை தெரியும் நாள்.

துலாம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் உணர்ச்சிவசப்பட்டு அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். வியாபாரத்தில் ஒப்பந்தங்கள் தள்ளிப் போகும். உத்தியோகத்தில் அதிகாரிகளால் அலைக்கழிக்கப்படுவீர்கள். விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள்.

விருச்சிகம்: குடும்பத்தில் விட்டுகொடுத்து போவது நல்லது. யாருக்காகவும் ஜாமீன் கையெழுத் திட வேண்டாம். சொந்த பந்தங்க ளுடன் மனத்தாங்கல் வந்து நீங்கும். உடல் நலம் பாதிக்கும். வியாபாரத்தில் புது முதலீடு செய்வது நல்லது. . பொறுமை தேவைப்படும் நாள்.

தனுசு: பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டு கொடுப்பீர்கள். தாய் வழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வீட்டை அழகுபடுத்துவீர்கள். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்தியோ கத்தில் சக ஊழியர்கள் பாராட்டும்படி நடந்து கொள்வீர்கள். புகழ் கௌரவம் கூடும் நாள்

மகரம்:  உடன் பிறந்தவர்கள் பாசமழை பொழி வார்கள். வாகனத்தை சரி செய்வீர்கள். பழைய கடனில்ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். வியாபாரிகள், விஐபிகள், வாடிக்கையாளர்கள் பெறுவார்கள். உத்தியோ கத்தில் தலைமையின் ஆதரவுக் கிடைக்கும். சிந்தனை திறன் பெருகும் நாள்.

கும்பம்:  சில வேலைகளை விட்டு கொடுத்து முடிப்பீர்கள். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு எளிதாக தீர்வு காண்பீர்கள்.
நேர்மறை சிந்தனை அதிகரிக்கும். உடல் நலம்சீராகும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் புது சலுகைகள் கிடைக்கும். திடீர் திருப்பம் நிறைந்த நாள்.

மீனம்: சந்திராஷ்டமம் தொடர் வதால் சில விஷயங்களில் திட்டமிட்டது ஒன்றாகவும் நடப்பது ஒன்றாகவும் இருக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்கள் ஆதரவு குறையும். உத்தியோகத்தில் உயரதிகாரி குறை கூறுவார். இடம் பொருள் ஏவல் அறிந்து செயல்பட வேண்டிய நாள்.

About இனியவன்

x

Check Also

RADIOTAMIZHA | இன்றைய நாள் எப்படி 13/07/2020

இன்று! சார்வரி வருடம், ஆனி மாதம் 29ம் தேதி, துல்ஹாதா 21ம் தேதி, 13.7.2020 திங்கட்கிழமை, தேய்பிறை, அஷ்டமி திதி ...