Home / ஆன்மீகம் / RADIOTAMIZHA | இன்றைய நாள் எப்படி 27/05/2020

RADIOTAMIZHA | இன்றைய நாள் எப்படி 27/05/2020

இன்று!
சார்வரி வருடம், வைகாசி மாதம் 14ம் தேதி, ஷவ்வால் 3ம் தேதி,
27.5.2020 புதன்கிழமை, வளர்பிறை பஞ்சமி திதி இரவு 10:47 வரை,
அதன்பின் சஷ்டி திதி, புனர்பூசம் நட்சத்திரம் காலை 6:17 வரை,
அதன்பின் பூசம் நட்சத்திரம் அதிகாலை 5:27 வரை, சித்தயோகம்.

நல்ல நேரம் : காலை 9.00 மணி முதல் காலை 10.30 மணி வரை.
ராகு காலம் : பிற்பகல் 12.00 மணி முதல் பிற்பகல 1.30 மணி வரை.
எமகண்டம் : காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை.
குளிகை : காலை 10.30 மணி முதல் பிற்பகல் 12.00 மணி வரை.
சூலம் : வடக்கு

• பரிகாரம் : பால்
• சந்திராஷ்டமம் : மூலம்
• பொது: முகூர்த்த நாள், விஷ்ணு வழிபாடு

மேஷம்: தொழிலில் புதிய மாற்றங்களை சந்திப்பீர்கள். பெண்களுக்கு பயணங்கள் நல்லவிதமாக அமையும். திருமண ஏற்பாட்டில் சில தடைகள் ஏற்படலாம். எதிர்பார்த்தபடியே விரும்பிய வேலை கிடைக்கும். எதிர்பாலினத்தினரிடம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

ரிஷபம்: பணியிடத்தில் மதிப்பு, மரியாதை கூடும். பெண்களுக்கு உரிய நன்மைகள் கிடைக்கும். மாணவர்கள் விளையாட்டில் அதிக ஆர்வம் கொள்வர். சோம்பலை உதறி எதிர்காலத்திற்கு தேவையானதை செய்வது நன்மை தரும். வருமானம் திருப்திகரமாகும்.

மிதுனம் : எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைப்பதில் தாமதம் ஏற்படும். உணவு விஷயத்தில கவனமாக இருக்க வேண்டும். புதிய உறவுகள் தேடிவரும். நண்பர்களிடம் வாக்குவாதம் செய்வதை தவிர்க்கவும். சமூகத்தில் முக்கிய நபர் என்று பெயர் எடுப்பீர்கள்.

கடகம்: உத்யோக விஷயத்தில் அலட்சியம் வேண்டாம். குடும்பத்தினரிடம் விட்டுக் கொடுத்து செல்லுங்கள். வியாபாரிகளின் நீ்ண்டகால பிரச்னைகள் முடிவுக்கு வரும். வங்கியில் எதிர்பர்த்த கடன் கிடைக்கும். கணவன் மனைவி இடையே நெருக்கம் கூடும்.

சிம்மம் : அத்தியாவசிய தேவைக்காக வங்கியில் கடன் வாங்குவீர்கள். கணவன் மனைவிக்கிடையே காணாமல் போயிருந்த ஒற்றுமை மீளும். குடும்பத்தில் இருந்த பிரச்னை தீரும். பணியாளர்கள் அலுவலக விஷயமாக வெளிநாடு செல்லும் வாய்ப்பை பெறுவர்.

கன்னி: வெளிநாட்டில் பயிலும் மாணவர்கள் எதிர்பாராத சவால்களைச் சந்திக்க வேண்டியிருக்கும். கொடுக்கல், வாங்கல் சீராக இருக்கும். பெண்களுக்கு சேமிப்பு பெருகும். உத்தியோகஸ்தர்கள் பணியிட மாற்றம் பெறுவதில் கவனம் செலுத்தினால் நல்லது.

துலாம்: தொழில் செய்பவர்கள் வளர்ச்சி காண்பர். பெண்கள் ஆடை, ஆபரணங்களை அன்பளிப்பாக பெற்று மகிழ்ச்சி கொள்வர். குடும்ப நிர்வாகத்தில் இருந்து வந்த பிரச்னைகள் தீரும். பணியாளர்களுக்கு மனநிம்மதி கூடும். அரசு வழியில் உதவி கிடைக்கும்.

விருச்சிகம்: உறவினர்கள் இடையே ஏற்பட்ட மனக் கசப்பு விலகும். உத்தியோகத்தில் இடமாற்றம், பதவி உயர்வு எதிர்பார்த்தபடி இருக்காது. உணவுத் தொழிலில் உள்ளவர்கள் முன்னேற்றத்தைக் காண முடியும். மாணவர்கள் மிகுந்த சுறுசுறுப்புடன் இயங்குவர்.

தனுசு: வியாபாரிகளுக்கு மகிழ்ச்சி அடையக்கூடிய வகையில் வியாபாரம் சிறப்பாக நடைபெறும். கணவன், மனைவி இடையே நெருக்கம் சற்று குறையும். எதிர்பாராத வகையில் சிறிய தொல்லைகளை சந்திப்பீர்கள். உயரதிகாரிகளின் நன்மதிப்பை பெற முயற்சிப்பீர்கள்.

மகரம்: தொழிலில் திருப்திகரமான வளர்ச்சியை காண்பீர்கள். குடும்பத்தில் பிரச்னை ஏற்பட்டாலும் அதனை திறமையாக சமாளிப்பீர்கள். அரசாங்க வகையில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். பணியாளர்களுக்கு பதவி உயர்வு கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம்.

கும்பம்: அரசாங்க ஆர்டர் கிடைத்து வியாபாரம் நல்ல முறையில் நடைபெறும். கணவன், மனைவி இடையே பரிவும், பாசமும் காணப்படும். பெண்கள் உடல்நலனில் கவனம் தேவை. சவால்களை எதிர்கொண்டு கடுமையாக உழைத்து வெற்றி காண்பீர்கள்.

மீனம்: மனதில் உற்சாகமும் செயல்களில் நேர்த்தியும் நிறைந்திருக்கும். கர்ப்பிணிகள் கவனத்துடன் இருக்க வேண்டும். நட்புக்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள். கடன் தொல்லை விலகும். அலுவலகம் தொடர்பான விஷயங்களில் நன்மைகளை பெறுவீர்கள்.

March 2020 - KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIK

About அகமுகிலன்

x

Check Also

RADIOTAMIZHA | இன்றைய நாள் எப்படி 13/07/2020

இன்று! சார்வரி வருடம், ஆனி மாதம் 29ம் தேதி, துல்ஹாதா 21ம் தேதி, 13.7.2020 திங்கட்கிழமை, தேய்பிறை, அஷ்டமி திதி ...