Home / ஆன்மீகம் / RADIOTAMIZHA | இன்றைய நாள் எப்படி 23/07/2020

RADIOTAMIZHA | இன்றைய நாள் எப்படி 23/07/2020

இன்று!
சார்வரி வருடம், ஆடி மாதம் 8ம் தேதி, துல்ஹஜ் 1ம் தேதி,
23.7.2020 வியாழக்கிழமை, வளர்பிறை, திரிதியை திதி இரவு 7:03 வரை,
அதன்பின் சதுர்த்தி திதி, மகம் நட்சத்திரம் இரவு 8:07 வரை,
அதன்பின் பூரம் நட்சத்திரம், அமிர்த – சித்தயோகம்.

நல்ல நேரம் : காலை 10.30 மணி முதல் காலை 12.00 மணி வரை.
ராகு காலம் : பிற்பகல் 1.30 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை.
எமகண்டம் : காலை 6.00 மணி முதல் காலை 7.30 மணி வரை.
குளிகை : காலை 9.00 மணி முதல் காலை 10.30 மணி வரை.
சூலம் : தெற்கு

* பரிகாரம் : தைலம்
* சந்திராஷ்டமம் : திருவோணம், அவிட்டம்
* பொது : தட்சிணாமூர்த்தி வழிபாடு.

 

மேஷம்: சமூகத்தில் உங்களின் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். வெளியூரில் இருக்கும் உறவினர் மூலம் எதிர்பார்த்த ஆதாயத்தை பெறுவீர்கள். உத்யோகஸ்தர்களுக்கு புத்திசாலித்தனம் காரணமாகப் பாராட்டுக் கிடைக்கும். அவசரப் போக்கு வேண்டாம்.

ரிஷபம்: குடும்பத்தினரிடையே ஏற்பட்ட மனக்கசப்புகள் தீரும். வியாபாரத்தில் அரசாங்க உதவி காரணமாக நிம்மதி அடைவீர்கள். கலைத் துறையினருக்கு மிகப் பெரிய அளவில் பாராட்டுக் கிடைக்கும். பெண்களின் ஆர்வம் காரமாகச் சிறு சிக்கல் ஏற்பட்டு விலகும்.

மிதுனம் : வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் சாதுர்யமாக பேசி லாபத்தை அதிகப்படுத்துவீர்கள். அலுவலகத்தில் உள்ள நிலுவைப் பணிகளை முடிப்பதற்கு மேலதிகாரி ஆதரவாக இருப்பார். பிள்ளைகளால் பெருமிதம் அடைவீர்கள். சுபச் செலவுகள் கூடும்.

கடகம்: தொழில் ரீதியான பயணங்கள் சிறப்பாக அமையும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். குடும்பத்தில் சில முக்கியமான முடிவுகளை எடுப்பீர்கள். புதிய முயற்சிகள் உற்சாகம் அளிக்கும். பெண்கள் அடுத்தவரின் ஆலோசனையை கேட்பதை தவிர்க்க வேண்டும்.

சிம்மம்: சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை புரிந்து கொள்வீர்கள். உறவினரிடமிருந்து உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். பெண்கள் பணத்தின் அருமையை உணர்ந்து சேமிப்பை அதிகப்படுத்துவர். நட்புக்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள்.

கன்னி: நெருங்கிய ஒருவரின் சந்திப்பால் கடந்த கால இனிய அனுபவங்களை நினைவு கூர்ந்து மகிழ்வீர்கள். பணியாளர்களுக்கு பொறுப்பு அதிகரிக்கும். வியாபார விஷயமாக திடீர் பயணத்தை மேற்கொள்வீர்கள். வீடு, வாகன பராமரிப்பு செலவுகள் கூடும்.

துலாம் : எதிரிகளின் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். வீடு வாங்குவது சம்பந்தமான முயற்சிகளில் உதவி கிடைக்கும். வியாபாரிகள் எடுத்த செயல்களை செய்து முடிப்பதில் சிறிய அளவில் தாமதம் ஏற்படும். பெண்களுக்கு பணபுழக்கம் எதிர்பார்த்ததை விட அதிகரிக்கும்.

விருச்சிகம்: பணவசதி எதிர்பார்த்த அளவில் இருக்கும். வியாபார வளர்ச்சிக்கு கூடுதலாக உழைக்க வேண்டியிருக்கும். முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள். சகஊழியர்களால் மனஅழுத்தம் உண்டாகலாம். கணவன், மனைவி இடையே இருந்த மனக்கசப்பு மறையும்.

தனுசு: பழைய கசப்பான சம்பவங்களால் நிம்மதி குறையலாம். அலுவலகத்தில் மற்றவர்களை நம்பி முக்கியப் பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் இருக்கும். தனிப்பட்ட வாழ்க்கையில் சில மாற்றங்களை சந்திப்பீர்கள்.

மகரம்: தாயாரின் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டு பின் சரியாகும். வியாபாரத்தில் கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. எடுத்த முயற்சிகளை செய்து முடிப்பதில் தாமதம் உண்டாகும். அக்கம் பக்கத்தினருடன் கருத்து வேறுபாடு ஏற்படாதபடி பேசுவது நல்லது.

கும்பம்: அலுவலகத்தில் மேலதிகாரியை அனுசரித்து செல்வது நல்லது. பிள்ளைகளின் மூலம் பெருமை கிடைக்கும். உங்களது சிறப்பான செயல்கள் மற்றவர்களின் பாராட்டை பெறும். எல்லோருக்கும் உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் வளரும்.

மீனம்: எதிர்கால வாழ்க்கை குறித்து நம்பிக்கை உருவாகும். வியாபாரிகளுக்கு பணப்புழக்கம் அதிகரிக்கும். பணியாளர்கள் கூடுதலாக உழைக்க வேண்டிவரும். கணவன், மனைவி இடையே மனக்கசப்புகள் வந்து நீங்கும். புதுவீடு மாறும் சூழல் ஏற்படலாம்.

About அகமுகிலன்

x

Check Also

RADIOTAMIZHA | இன்றைய நாள் எப்படி 02/08/2020

இன்று! சார்வரி வருடம், ஆடி மாதம் 18ம் தேதி, துல்ஹஜ் 11ம் தேதி, 2.8.2020 ஞாயிற்றுக்கிழமை, வளர்பிறை, சதுர்த்தசி திதி ...