Home / ஆன்மீகம் / RADIOTAMIZHA | இன்றைய நாள் எப்படி 22/07/2020

RADIOTAMIZHA | இன்றைய நாள் எப்படி 22/07/2020

இன்று!
சார்வரி வருடம், ஆடி மாதம் 7ம் தேதி, துல்ஹாதா 30ம் தேதி,
22.7.2020 புதன்கிழமை, வளர்பிறை, துவிதியை திதி இரவு 8:55 வரை,
அதன்பின் திரிதியை திதி, ஆயில்யம் நட்சத்திரம் இரவு 9:11 வரை,
அதன்பின் மகம் நட்சத்திரம், சித்தயோகம்.

நல்ல நேரம் : காலை 9.00 மணி முதல் காலை 10.30 மணி வரை.
ராகு காலம் : பிற்பகல் 12.00 மணி முதல் பிற்பகல 1.30 மணி வரை.
எமகண்டம் : காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை.
குளிகை : காலை 10.30 மணி முதல் பிற்பகல் 12.00 மணி வரை.
சூலம் : வடக்கு

* பரிகாரம் : பால்
* சந்திராஷ்டமம் : உத்திராடம், திருவோணம்
* பொது : சந்திர தரிசனம்

 

மேஷம்: குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். தந்தையின் உடல் நலத்தில் முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில் உள்ள கடன்களை வசூலிப்பீர்கள். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடைபெறும். பணியாளர்களுக்கு அலைச்சல் குறையும்.

ரிஷபம்: பணவரவு உண்டு. உறவினர், நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். வியாபாரிகளுக்கு அரசாங்க வகையில் அனுகூலம் கிடைக்கும். பிரபலங்களால் ஆதாயமடைவீர்கள். உத்தியோகத்தில் உங்களின் புதிய முயற்சிகளுக்கு பாராட்டுப் பெறுவீர்கள்.

மிதுனம் : வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் அறிமுகமாவதால் லாபம் கூடும். பெண்களுக்கு தொட்டது துலங்கும். சிலருக்கு உடல் சோர்வு ஏற்படும். திருமண உறவில் புரிதல் அதிகரிக்கும். செலவுகளைக் கட்டுப்படுத்தி சேமிப்பை அதிகப்படுத்துவீர்கள்.

கடகம்: அலுவலகத்தில் மகிழ்ச்சிகரமான சூழல் நிலவும். வியாபாரிகளுக்கு வெற்றி தேடி வரும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். அவசரத் தேவைக்குச் சேமிப்பு பணத்தை பயன்படுத்துவீர்கள். பெண்கள் குடும்ப நலனில் அக்கறை கொள்வர்.

சிம்மம் : குடும்பத்தில் நிம்மதி நிலவும். உடன் பிறந்தவர்கள் ஒற்றுமையாக இருப்பார்கள். பணியாளர்களுக்கு அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வாகனத்தை விற்க நினைப்பவர்களுக்கு நல்ல செய்தி உண்டு. வியாபாரத்தில் லாபம் கூடும்.

கன்னி : திட்டமிட்ட முயற்சியில் வெற்றி பெறுவீர்கள். உத்தியோகத்தில் உள்ள நுணுக்கங்களை மற்றவர்களுக்குக் கற்றுக் கொடுப்பீர்கள். பெண்களின் நீண்ட நாள் கனவு நிறைவேறுவதால் மகிழ்ச்சியுடன் காணப்படுவர். விரும்பிய பொருட்கள் வீடு வந்து சேரும்.

துலாம் : அலுவலகத்தில் அதிகாரபதவி கிடைக்க வாய்ப்பு உள்ளது. மனதுக்கு பிடித்தமானவரின் பிறந்தநாளுக்காக பரிசை கொடுத்து அவரை மகிழ்ச்சியில் ஆழ்த்துவீர்கள். வியாபாரச்சூழல் சவால்கள் நிரம்பியதாக இருக்கும். தாயின் ஆசியை பெறுவீர்கள்.

விருச்சிகம்: கடந்த நாட்களில் இருந்த மனஉளைச்சல் நீங்கி ஒரு தெளிவு பிறக்கும். பணப் பற்றாக்குறை நீங்குவதால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். உத்தியோகத்தில் சகஊழியர்களால் சில ஆதாயம் அடைவீர்கள்.

தனுசு: தன்னம்பிக்கை தரும் விதத்தில் பேசி அனைவரையும் கவருவீர்கள். பண விஷயங்களில் எச்சரிக்கை தேவை. பெண்கள் ஆடை, ஆபரணங்களை அன்பளிப்பாக பெற்று மகிழ்ச்சி கொள்வர். மேலதிகாரியிடம் பணிவுடன் நடந்தால் பதவி உயர்வு கிடைக்கும்.

மகரம்: குடும்பத்தின் நிம்மதி சற்றுக் குறையலாம். வியாபாரத்தில் புதிய முதலீடுகளை ஒத்திப் போடுவது நல்லது. உறவினர் வீட்டு சுபநிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள். சரியான தருணத்தில் உதவும் நண்பர்களை எண்ணி பெருமிதம் கொள்வீர்கள்.

கும்பம் : மனதில் நிம்மதி நிறைந்திருக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த அளவை விட லாபம் குறைவாக இருந்தாலும் திருப்தி அடைவீர்கள். உத்தியோகத்தில் சிறு சிக்கல்கள் வந்து நீங்கும். பெண்கள் சில சங்கடமான சூழல்களை சமாளிக்க வேண்டிவரும்.

மீனம்: மனதில் பாதுகாப்பின்மை உணர்வு மேலோங்கி இருக்கும். திட்டமிட்ட செயல்கள் அனைத்திலும் வெற்றி பெறுவீர்கள். வியாபாரிகளுக்கு எதிர்பார்த்த அரசு உதவிகள் தாமதம் இன்றி கிடைக்கும். பணியாளர்கள் பதவி உயர்வு கிடைப்பதால் மகிழ்ச்சி கொள்வர்.

About அகமுகிலன்

x

Check Also

RADIOTAMIZHA | இன்றைய நாள் எப்படி 02/08/2020

இன்று! சார்வரி வருடம், ஆடி மாதம் 18ம் தேதி, துல்ஹஜ் 11ம் தேதி, 2.8.2020 ஞாயிற்றுக்கிழமை, வளர்பிறை, சதுர்த்தசி திதி ...