Home / ஆன்மீகம் / RADIOTAMIZHA | இன்றைய நாள் எப்படி 20/02/2020

RADIOTAMIZHA | இன்றைய நாள் எப்படி 20/02/2020

இன்று!
விகாரி வருடம், மாசி மாதம் 8ம் தேதி, ஜமாதுல் ஆகிர் 25ம் தேதி,
20.2.2020 வியாழக்கிழமை, தேய்பிறை, துவாதசி திதி மாலை 6:12 வரை,
அதன் பின் திரயோதசி திதி, பூராடம் நட்சத்திரம் காலை 9:49 வரை,
அதன்பின் உத்திராடம் நட்சத்திரம், சித்தயோகம்.

நல்ல நேரம்: காலை 10:30-12:00 மணி
ராகு காலம்: பகல் 1:30-3:00 மணி
எமகண்டம்: காலை 6:00-7:30 மணி
குளிகை: காலை 9:00-10:30 மணி
சூலம் : தெற்கு

பரிகாரம் : தைலம்
சந்திராஷ்டமம் : மிருகசீரிடம்
பொது தட்சிணாமூர்த்தி வழிபாடு, முகூர்த்தநாள்.

 

மேஷம்: தொடர்பில்லாத பணியில் ஈடுபட நேரிடலாம். குடும்பத்தினர் செயலால் குடும்ப கடமைகளை உணர்வீர்கள். தொழில், வியாபாரத்தில் உள்ள அனுகூலத் தன்மையை பாதுகாப்பது நல்லது. கூடுதல் முயற்சியால் பணவரவு கிடைக்கும். கண்களின் பாதுகாப்பில் கவனம் வேண்டும்.

ரிஷபம்: மாறுபட்ட நிகழ்வால் மனதில் அதிருப்தி ஏற்படலாம். பேச்சில் நிதானத்தை பின்பற்ற வேண்டும். தொழில், வியாபாரத்தில் உள்ள நிலுவைப் பணியை நிறைவேற்றுவீர்கள். சேமிப்புப் பணம் அவசர செலவுக்கு பயன்படும். உடல்நலத்திற்கு ஒவ்வாத உணவினை தவிர்ப்பது நல்லது.

மிதுனம்: சிறு செயலையும் நேர்த்தியுடன் செய்வீர்கள். உங்களின் தனித்திறமை நண்பர்களால் பாராட்டை பெறும். தொழில், வியாபாரத்தில் போட்டி குறையும். பணவரவுடன் நன்மையும் அதிகரிக்கும். பணியாளர்கள் அயராத உழைப்பினால் நிர்வாகத்திடம் பாராட்டு பெறுவர்.

கடகம்: சான்றோர்களின் ஆசி கிடைக்கும். புதிய அணுகுமுறையால் தொழில், வியாபாரத்தில் இருந்த இடையூறை சரி செய்வீர்கள். ஆதாய வருமானம் கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு எதிரியால் இருந்த தொல்லை குறையும். பெண்கள் குடும்ப நலனில் மிகுந்த அக்கறை கொள்வர்.

சிம்மம்: குடும்ப பெரியோரின் ஆலோசனை நல்வழி காட்டும். தொழில், வியாபாரம் செழிக்க அக்கறையுடன் பணிபுரிவீர்கள். எதிர்பார்த்த பணவரவு சீரான அளவில் கிடைக்கும். அதிக பயன்தராத பொருளை விலைக்கு வாங்க வேண்டாம். தியானம் மனஅமைதியை தரும்.

கன்னி: தாமதமான செயல் நல்ல தீர்வை பெறுவதற்கான சூழல் உருவாகும். உண்மை நிலவரம் உணர்ந்து செயல்படுவீர்கள். தொழில், வியாபார நடைமுறை சீரான அளவில் இருக்கும். பணவரவை விட செலவு அதிகரிக்கும். வாகனத்தில் மிதவேகத்தை பின்பற்றுவது நல்லது.

துலாம்: இஷ்ட தெய்வ அருள் பல வகைகளில் துணை நிற்கும். தொழில், வியாபார வளர்ச்சி புதிய இலக்கை எட்டும். பணம் கொடுக்கல், வாங்கல் சீராகும். மனைவி விரும்பிய பொருட்களை வாங்கித் தருவீர்கள். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவர்.

விருச்சிகம்: வாழ்வில் லட்சியங்களை உணர்ந்து பணிபுரிவது நல்லது. தொழில், வியாபார முன்னேற்றத்திற்கு கூடுதல் மூலதனம் தேவைப்படும். உணவுக் கட்டுப்பாடு மிகுந்த நன்மை தரும். இயந்திரப்பிரிவில் பணிபுரிபவர்கள் கவனமுடன் செயல்படுவது நல்லது.

தனுசு: திறமை வெளிப்படும் விதத்தில் பேச்சு, செயல் அமையும். எதிரிகள் தந்த தொந்தரவு மறையும். தொழில், வியாபாரம் செழிக்க கூடுதலாக பணிபுரிவீர்கள். தாராள பணவரவு கிடைக்கும். பிள்ளகைள் விரும்பிக் கேட்ட பொருளை வாங்கித் தந்து மகிழ்ச்சியில் ஆழ்த்துவீர்கள்.

மகரம்: சிரமங்களை பிறரிடம் சொல்ல வேண்டாம். மனதை ஒருமுகப்படுத்துவதால் பல நன்மை கிடைக்கும். தொழில், வியாபார வளர்ச்சிக்கு கூடுதலாக பணிபுரிவீர்கள். பணச் செலவில் சிக்கனம் நல்லது. பொருட்களை கடனாக கொடுக்க, வாங்க வேண்டாம்.

கும்பம்: வாழ்வில் வளம் பெற புதிய சூழ்நிலை உருவாகும். தொழில், வியாபாரத்தில் அபரிமிதமான வளர்ச்சி ஏற்படும். உபரி பணவரவை சேமிப்பாக மாற்றுவீர்கள். பணியாளர்களுக்கு தகுந்த சலுகை கிடைக்கும். பெண்கள் பிள்ளைகள் நலனில் அக்கறை கொள்வர்.

மீனம்: முக்கியஸ்தரின் உதவி கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் இலக்கு திட்டமிட்டபடி எளிதாக நிறைவேறும். பணவரவுடன் நன்மையும் அதிகரிக்கும். குடும்பத்தினருடன் சுற்றுலா செல்ல திட்டமிடுவீர்கள். இஷ்ட தெய்வ அருள் கிடைக்கும்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

RADIOTAMIZHA | இன்றைய நாள் எப்படி 27/03/2020

இன்று! விகாரி வருடம், பங்குனி மாதம் 14ம் தேதி, ஷாபான் 1ம் தேதி, 27.3.2020 வெள்ளிக்கிழமை, வளர்பிறை, திரிதியை திதி ...

%d bloggers like this: