Home / ஆன்மீகம் / RADIOTAMIZHA | இன்றைய நாள் எப்படி 14/05/2020

RADIOTAMIZHA | இன்றைய நாள் எப்படி 14/05/2020

இன்று!
சார்வரி வருடம், வைகாசி மாதம் 1ம் தேதி, ரம்ஜான் 20ம் தேதி,
14.5.2020 வியாழக்கிழமை, தேய்பிறை, சப்தமி திதி காலை 11:07 வரை,
அதன்பின் அஷ்டமி திதி, திருவோணம் நட்சத்திரம் காலை 10:20 வரை,
அதன்பின் அவிட்டம் நட்சத்திரம், சித்தயோகம்.

நல்ல நேரம் : காலை 10.30 மணி முதல் காலை 12.00 மணி வரை.
ராகு காலம் : பிற்பகல் 1.30 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை.
எமகண்டம் : காலை 6.00 மணி முதல் காலை 7.30 மணி வரை.
குளிகை : காலை 9.00 மணி முதல் காலை 10.30 மணி வரை.
சூலம் : தெற்கு

• பரிகாரம் : தைலம்
• சந்திராஷ்டமம் : திருவாதிரை, புனர்பூசம்
• பொது: தட்சிணாமூர்த்தி, குருவாயூரப்பன் வழிபாடு.

 

மேஷம்: பந்தயங்களில் ஈடுபட்டு அதில் வெற்றியும் காண்பீர்கள். பொதுநல சேவைகள் செய்து புகழ் பெறுவீர்கள். மாணவர்களின் நீண்டநாள் விருப்பம் நிறைவேறும். எதிர்பாலினத்தினரிடம் பேசும்போது கவனம் தேவை. அவசர செலவுகளுக்கு சேமிப்பு பணம் பயன்படும்.

ரிஷபம்: அலுவலகத்தில் உங்களுக்கு கீழே வேலை பார்ப்பவர்கள் ஒத்துழைப்பார்கள். பிள்ளைகளால் செலவுகள் ஏற்படும். பெண்கள் பல புதிய சாதனைகளை நிகழ்த்துவர். மாணவர்களுக்கு நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் இருக்கும்.

மிதுனம் : தந்தை நலனில் கவனம் செலுத்த வேண்டியிருக்கும். தடைபட்டிருந்த அனைத்து செயல்களும் நல்லபடியாக முடியும். சுபநிகழ்ச்சிகள் மூலமாக உறவினர்களை சந்தித்து மகிழ்ச்சி அடைவீர்கள். வியாபாரத்தில் பங்குதாரரின் ஆலோசனையை கேட்டு நடப்பது நல்லது.

கடகம்: பணியாளர்களுக்கு பணிச்சுமை குறையும். பெண்கள் குடும்ப ஒற்றுமைக்காக செயலாற்றுவர். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் சுமாராகவே இருக்கும். கலைத்துறையினர் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்வது நல்லது.

சிம்மம் : வெளிநாட்டு வேலையை எதிர்பார்ப்பவர்களுக்கு நல்ல செய்தி வந்து சேரும். பெண்கள் பேச்சில் நிதானப்போக்கை கடைபிடித்தால் நல்லது. அலுவலகத்தில் பொறுப்பான பணியில் இருப்பவர்கள் வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடலாம்.

கன்னி: எல்லோரிடமும் அன்பு, பாசத்துடன் நடந்து கொள்வீர்கள். பெண்களின் நீண்ட நாள் கனவு நிறைவேறுவதற்கான சூழல் ஏற்படும். பணியாளர்கள் மேலதிகாரியின் பாராட்டைப் பெறுவர். புதிய நண்பர்களிடம் எச்சரிக்கையாகப் பழகுவது நன்மை தரும்.

துலாம்: குடும்ப விஷயங்களை அக்கம் பக்கத்தினரிடம் பகிர்வதை தவிர்ப்பது நல்லது. வியாபாரிகள் சவால்களை எதிர்கொண்டு கடுமையாக உழைத்து வெற்றி காண்பர். மனைவியின் பாசம் நிறைந்த அன்பில் மகிழ்வீர்கள். மகளுக்கு எதிர்பார்த்த வரன் அமையும்.

விருச்சிகம்: குடும்பத்தில் தேவையற்ற பிரச்னைகள் உருவாகலாம். வியாபாரிகளுக்கு எதிர்பார்த்த உதவி கிடைப்பதில் தாமதம் ஏற்படும். உத்யோகத்தில் இருப்பவர்கள் மேலதிகாரியின் உத்தரவை மீற வேண்டாம். சிறு பயணங்களில் வெற்றி உண்டு

தனுசு: மனதில் உற்சாகமும் செயல்களில் நேர்த்தியும் நிறைந்திருக்கும். கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டாலும் சரியாகிவிடும். சான்றோரின் ஆசியை பெறுவீர்கள். அலுவலகப் பணியாளர்களுக்கு தேவையற்ற பயம் மேலோங்கும்.

மகரம்: வீடு, வாகனம் தொடர்பான செலவுகள் உண்டாகலாம். பிள்ளைகளின் தேவையை அறிந்து நிறைவேற்றுவீர்கள். மாணவர்கள் இணையதளம் மூலம் பல்வேறு செய்திகளை அறிந்து கொள்வர். வியாபாரிகளுக்கு வெளிச்சமான சூழ்நிலை உருவாகும்.

கும்பம்: உறவினர்களால் வீண் செலவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. கலைஞர்களுக்கு வெற்றிகள் குவியும். தொழிலாளர்கள் திறமைக்குரிய பலனைப் பெறுவர். பெண்களுக்கு முக்கியமான எண்ணங்கள் ஈடேறும். வங்கியில் எதிர்பார்த்த கடனுதவி கிடைக்கும்.

மீனம்: காது சம்பந்தமான உபாதைகள் ஏற்பட்டு விரைவில் சரியாகும். வாழ்க்கைத் துணைவரால் அனுகூலம் உண்டாகும். வியாபாரிகளுக்கு ஓரிரு எண்ணங்கள் ஈடேறும். பிள்ளைகள் நலனில் கவனம் தேவை. சகபணியாளர்கள் உதவிகரமாக இருப்பர்.

March 2020 - KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIK

About அகமுகிலன்

x

Check Also

RADIOTAMIZHA | இன்றைய நாள் எப்படி 13/07/2020

இன்று! சார்வரி வருடம், ஆனி மாதம் 29ம் தேதி, துல்ஹாதா 21ம் தேதி, 13.7.2020 திங்கட்கிழமை, தேய்பிறை, அஷ்டமி திதி ...