Home / உள்நாட்டு செய்திகள் / RADIOTAMIZHA | அரச நிறுவனங்களில் தற்காலிகமாக பணிபுரிவோருக்கு மகிழ்ச்சியான செய்தி

RADIOTAMIZHA | அரச நிறுவனங்களில் தற்காலிகமாக பணிபுரிவோருக்கு மகிழ்ச்சியான செய்தி

அரச நிறுவனங்களில் தற்காலிகமாக மற்றும் ஒப்பந்த அடிப்படையில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ள அலுவலக உதவியாளர்கள் மற்றும் சாரதிகளின் தொழிலை நிரந்தரமாக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பொது நிர்வாகம், உள்துறை, மாகாண சபைகள் மற்றும் உள்ளாட்சி அமைச்சு இந்தத் தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது.

இது தொடர்பில் அனைத்து அமைச்சின் செயலாளர்கள், திணைக்கள பிரதானிகள் மற்றும் மாவட்ட செயலாளர்களுக்கும் சுற்றறிக்கை மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

பொது நிர்வாகம், உள்துறை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் ஜனக பண்டார தென்னகோனின் அறிவுறுத்தலின் பேரில் இந்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டது.

நிரந்தர அலுவலக உதவியாளர்கள் மற்றும் சாரதிகள் 180 நாட்கள் தொடர்ச்சியான சேவையை முடித்து தேவையான கல்வித் தகுதிகளைப் பூர்த்தி செய்திருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

RADIOTAMIZHA | கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள அரச ஊழியர்களுக்கு இலவச காப்புறுதி

அரசாங்கம் முன்னெடுத்துள்ள கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கiயில் ஈடுபட்டுள்ள அரச அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு விசேட காப்புறுதித் திட்டத்தை இலங்கை ...

%d bloggers like this: