Home / விளையாட்டுச் செய்திகள் (page 74)

விளையாட்டுச் செய்திகள்

இங்கிலாந்து அணிக்கெதிரான டி20 போட்டி: 20 ஓட்டங்கள் வித்தியாசத்தில் மேற்கிந்திய தீவுகள் வெற்றி..!

இங்கிலாந்து சென்றுள்ள மேற்கிந்திய தீவுகள் அணி டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடி வருகிறது. மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இங்கிலாந்து அணி 2-1 என கைப்பற்றியது. இரு அணிகளுக்கிடையேயான ஒரு டி20 கிரிக்கெட் போட்டி செஸ்டர்-லி-ஸ்டிரிட் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பீல்டிங்கை தேர்ந்தெடுத்தது. இதையடுத்து, ...

Read More »

டெஸ்ட் அரங்கிலிருந்து டுமினி ஓய்வு..!

தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியின் சகலதுறை ஆட்டக்காரர் ஜீன் போல் டுமினி டெஸ்ட் போட்டிகள் மற்றும் முதல்தரப் போட்டிகளில் இருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார். இங்கிலாந்துக்கு எதிராக கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற நான்கு போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில், முதல் போட்டியில் மட்டுமே இணைத்துக்கொள்ளப்பட்டிருந்தார். அதன்பின் எந்தவொரு டெஸ்ட் போட்டியிலும் அவர் கலந்துகொள்ளவில்லை. டெஸ்ட் போட்டிகளில் இருந்து ...

Read More »

இலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழுவில் அதிரடி மாற்றம்..!

இலங்கை கிரிக்கெட் அணியின் தெரிவுக் குழு தலைவராக  இலங்கை அணியின் முன்னாள் வேகபந்து வீச்சாளர் கிரகம் லெப்ரோய் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த காலங்களில் இலங்கை அணி கலந்து கொண்ட போட்டி தொடர்களில்  தொடர் தோல்விகளுக்கு பொறுப்பேற்று சனத் ஜெயசூரிய தலைமையிலான இலங்கை தெரிவுக் குழு அங்கத்தினர்கள் அனைவரும் இராஜினாமா செய்தனர். இதைதொடர்ந்து  இலங்கை கிரிக்கெட் சபை குறித்த ...

Read More »

ஆஸிக்கு எதிரான ஒருநாள் தொடரில் தவான் இல்லை; ரேஹானேக்கு வாய்ப்பு??

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் 17-ந்தேதி தொடங்குகிறது. இந்த தொடரை அதிக வித்தியாசத்தில் கைப்பற்றி இரு அணிகளும் முதல் இடத்தை பிடிக்க துடிக்கின்றன. ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் மூன்று போட்டிக்கான இந்திய அணியில் தொடக்க வீரரான தவான் இடம்பிடித்திருந்தார். தற்போது அவரது மனைவி உடல் நிலை ...

Read More »

யுவராஜ், ரெய்னாவிற்கான கதவு மூடப்படவில்லை: ரவி சாஸ்திரி..!

இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பிடிப்பது தற்போது எளிதான காரியம் இல்லை. பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் மட்டும் சிறப்பாக செயல்பட்டால் போதாது. உடற்பயிற்சி சோதனையில் வெற்றி பெற வேண்டும். பிசிசிஐ-யால் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள உடற்பயிற்சி சோதனையால் யுவராஜ் சிங் மற்றும் ரெய்னாவிற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இலங்கை மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடரில் இருவரும் ...

Read More »

தேசிய விளையாட்டு விழாவில் பாலுராஜ் மீண்டும் சாதனை

43 தேசிய விளையாட்டு விழாவின் காராத்தே போட்டிகள் கண்டி திகன உள்ளக விளையாட்டரங்கில் இடம்பெற்றது. இப்போட்டியில் கிழக்கு மாகாண சார்பாக கலந்துகொண்ட பாலுராஜ் காராத்தே -டூ போட்டியில் கலந்துகொண்டு தங்கப்பதக்கம் வென்றார். இவர் தொடர்ச்சியாக 6வது முறையாகவூம்(2012-2017) தனது சிறப்பான திறமைகளை வெளிப்படுத்தி முதலிடம்பெற்று தங்கப்பதக்கம் வென்றுள்ளதோடு தெற்காசிய காராத்தே போட்டிகளில் கலந்துகொண்டு 3முறை தங்கப்பதக்கம் ...

Read More »

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடர் குறித்த லட்சுமண் கருத்துக்கு மைக்கேல் கிளார்க் பதிலடி..!

வி.வி.எஸ்.லட்சுமண் நேற்று அளித்த ஒரு பேட்டியில், ‘இந்தியாவின் ‘நம்பர் ஒன்’ எதிராளி ஆஸ்திரேலியா என்பதில் சந்தேகமில்லை. இரு அணிகளுமே கடினமாக போராடிக்கூடியது. இந்த தொடரிலும் அதில் வித்தியாசம் இருக்கப்போவதில்லை. இந்த ஒரு நாள் தொடரை இந்திய அணி 4-1 என்ற கணக்கில் கைப்பற்றும்’ என்று தனது கணிப்பை வெளியிட்டார். மேலும் ஆஸ்திரேலியாவின் பந்து வீச்சு பலவீனமாக ...

Read More »

ஐ.சி.சி தரவரிசையில் அன்டர்சன் முதலிடம்..!

சர்வதேச கிரிக்கெட் சபையின் டெஸ்ட் போட்டிகளுக்கான பந்துவீச்சாளர்களின் தரப்படுத்தலில், இங்கிலாந்து அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜேம்ஸ் அன்டர்சன் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார். 35 வயதான ஜேம்ஸ் அன்டர்சன், 2009ஆம் ஆண்டு முத்தையா முரளிதரன் முதலிடம் பெற்ற பின்னர் முதலிடத்தைப் பிடிக்கும் வயதான பந்துவீச்சாளர் என்பதுடன், 2006ஆம் ஆண்டு கிளென் மக்ராத் முதலிடம் பெற்ற பின்னர் முதலிடத்தைப் பிடிக்கும் வயதான ...

Read More »

கோஹ்லியே எமது இலக்கு- ஸ்மித்

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் விராட் கோஹ்லியை கட்டுப்படுத்துவதே எங்கள் இலக்கு என அவுஸ்திரேலிய அணி தலைவர் ஸ்டீவன் சுமித் கூறியுள்ளார். அவுஸ்திரேலியா கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுபயணம் செய்து ஐந்து ஒருநாள் போட்டிகளில் விளையாடவுள்ளது. முதல் போட்டி வரும் 17 ஆம் திகதி தொடங்கவுள்ளது. போட்டி குறித்து அவுஸ்திரேலியா தலைவர் ஸ்டீவன் சுமித் கூறுகையில், இந்த ...

Read More »

சங்கக்காரவிற்கு இந்தியாவில் கிடைக்கும் உயரிய மரியாதை..!

இலங்கை அணியின் முன்னாள் அணித் தலை­வரும் நட்­சத்­திர வீர­ரு­மான குமார் சங்­கக்­கா­ர­வுக்கு இந்­திய கிரிக்கெட் சபை விசேட அழைப்­பொன்றை விடுத்­துள்­ளது. இந்­திய கிரிக்கெட் சபை மற்றும் சர்­வ­தேச கிரிக்கெட் பேர­வையின் முன்னாள் தலை­வரும், கொல்­கத்தா கிரிக்கெட் சங்­கத்தின் முன்னாள் தலை­வ­ரு­மான ஜக்­மோகன் டால்­மி­யாவின் நினை­வு­தின நிகழ்வில் கலந்­து­கொண்டு விசேட உரை­யொன்றை நிகழ்த்­து­வ­தற்கே இந்த விசேட அழைப்பு ...

Read More »