Home / உள்நாட்டு செய்திகள்

உள்நாட்டு செய்திகள்

854.3 கிலோ கிராம் சுறா துடுப்புகளுடன் ஒருவர் கைது!!

கடற்படை வீரர்களினால் புதுமதலன் பகுதியில் 23 திகதி நடத்தப்பட்ட சோதனையின் நடவடிக்கையின் போது, சுறா துடுப்புகள் வைத்திருந்த ஒருவரை கைது செய்தனர். கிழக்கு கடற்படைத் தளத்துடன் இணைந்த கடற்படை வீரர்கள் புதுமதலன் பகுதியில் நடத்தப்பட்ட நடவடிக்கையின் போது 854.3 கிலோ கிராம் சுறா துடுப்புகளுடன் சந்தேக நபர் ஒருவரை கைது செய்தனர். ஒரு உறைவிப்பான் லாரி ...

Read More »

திடீரென மயக்கமுற்ற ஆறு மாணவர்கள்!!

திடீரென மயக்கமுற்ற மாணவர்கள் ஆறு பேர் காரைதீவு பிரதேச வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். காரைதீவு சண்முகா மகாவித்தியாலயம் மற்றும் காரைதீவு ராமகிருஸ்ணா பெண்கள் பாடசாலையை சேர்ந்த ஆறு மாணவர்களே இவ்வாறு சிகிச்சை பெற்று வருகின்றனர். கடும் வெயில் காரணமாகவும், காலை ஆகாரம் உண்ணாமை மற்றும் இதர காரணங்களால் அவர்களுக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டிருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ...

Read More »

939.2 கிலோ கிராம் பீடி இலைகள் கடற்படையினரால் மீட்பு!!

மன்னார் நடுகுடா பகுதியில் 24 திகதி நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது 939.2 கிலோ கிராம் பீடி இலைகள் கடற்படையினரால்  கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வட மத்திய கடற்படை கட்டளையுடன் இணைக்கப்பட்ட கடற்படை வீரர்கள் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது 45 பொதிகளை கொண்ட பீடி இலைகளை இவ்வாறு கண்டுபிடித்துள்ளனர் மேலும் இது மன்னார் நாடுகுடாவின் கடற்கரை பகுதியில் ...

Read More »

பிரதேச செயலாளருக்கு 10 வருட கடூழிய சிறைத்தண்டனை!!

முன்னாள் ஏறாவூர் பிரதேச செயலாளர் சதகத்துல்லா ஹில்மி-க்கு திருகோணமலை மேல் நீதிமன்றம் இன்று 10 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்துள்ளது. கொலை சம்பவம் தொடர்பில் குற்றவாளியாகக் காணப்பட்டதை அடுத்து, முன்னாள் பிரதேச செயலாளருக்கு திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் 10 ஆண்டு கடூழிய சிறைத்தண்டனை விதித்துள்ளார். 2006 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ...

Read More »

யாழ் வைதீஸ்வராக் கல்லூரி முதல் முறையாக பங்கு பற்றிய வளைகோல் போட்டி!!

யாழ் வைதீஸ்வராக் கல்லுரிக்கும் யாழ் பல்கலைக்கழக பெண்கள் அணிகளுக்கும் இடையில் நட்பு ரீதியிலான வளைகோற்பந்தாட்ட போட்டி நடைபெற்றது. இதில் யாழ் பல்கலைக்கழக அணி மூன்று கோல்களையும் வைதீஸ்வராக் கல்லூரி ஒரு கோல்களையும் பெற்றுக் கொண்டது. இதுவே யாழ் வைதீஸ்வராக் கல்லூரி முதல் முறையாக பங்கு பற்றிய வளைகோல் போட்டியாகும். இதன் பயிற்றுவிப்பாளர் உ.வினோத்குமார். உடற்கல்வி ஆசிரியர் ...

Read More »

டெங்கு நோய் தொற்று காரணமாக இதுவரை 22873 பேர் பாதிப்பு!!

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதிவரை டெங்கு நோய் தொற்று காரணமாக 22 ஆயிரத்து 873 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சுகாதார அமைச்சின் டெங்கு நோய் தடுப்பு பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. டெங்கு நோய் தொற்று காரணமாக மேல் மாகாணத்தை சேர்ந்தவர்களே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்தவகையில் மேல் மாகாணத்தில் மாத்திரம் 9 ஆயிரத்து 645 ...

Read More »

அரச வைத்தியர்கள் நடத்திய பணிப்புறக்கணிப்பு போராட்டம் நிறைவு!!

சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்னவிற்கு எதிர்ப்பு தெரிவித்து, களுத்துறை மாவட்டத்தின் அரச வைத்தியர்கள் நடத்திய பணிப்புறக்கணிப்பு போராட்டம் நிறைவு செய்யப்பட்டுள்ளது. இன்று காலை அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் நிறைவேற்றுக் குழு ஒன்று கூடி இதற்கான தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது. நேற்று பகல் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் களுத்துறை – நாகொட வைத்தியசாலையில் பொதுமனு ஒன்றில் ...

Read More »

நல்லூரில் சிறப்புற இடம்பெற்ற சதங்கை நாதம் நடன ஆற்றுகை நிகழ்வு!!

யாழ் நல்லை கலாமந்திர் நடனப்பள்ளி நடத்திய சதங்கை நாதம் 2019 என்ற நடன ஆற்றுகை நிகழ்வு 23. 06. 2019 ஞாயிற்றுக்கிழமை நல்லூர் துர்க்காதேவி மணி மண்டபத்தில் சிறப்புற இடம்பெற்றது கோப்பாய் ஆசிரிய கலாசாலை பிரதி முதல்வர் செந்தமிழ்ச்சொல்லருவி ச.லலீசன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக மட்டக்களப்பு சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவக ...

Read More »

இன்று அமைச்சரவை கூட்டத்தில் முன்வைக்கப்படவுள்ள அறிக்கை!!

‘Batticaloa Campus’ நிறுவனம் தொடர்பில் உயர்கல்வி தொடர்பிலான மேற்பார்வை குழுவினால் தயாரிக்கப்பட்ட அறிக்கை இன்று (25ஆம் திகதி) அமைச்சரவை கூட்டத்தில் முன்வைக்கப்படவுள்ளது. குறித்த அறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகளுக்கு ஏற்ப அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பில் தற்போது கலந்துரையாடப்பட்டுள்ளதாக குறித்த குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர், பேராசிரியர் ஆஷூ மாரசிங்க தெரிவித்துள்ளார். இதற்கிணங்க, Batticaloa Campus நிறுவனம் தொடர்பில் ...

Read More »

வெலிக்கடை சிறை கைதிகள் சிலர் வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றம்!!

வெலிக்கடை சிறைச்சாலையிலுள்ள 150 கைதிகள் பூசா மற்றும் அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர். அவர்களில் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள 69 கைதிகளும் அடங்குவதாக சிறைச்சாலைகள் பணிப்பாளர் நாயகம் J.W. தென்னகோன் தெரிவித்துள்ளார். வெலிக்கடை சிறைச்சாலையில், மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள கைதிகள் தடுத்துவைக்கப்பட்டுள்ள பகுதியில் மேற்கொள்ளப்படவுள்ள திருத்தப்பணிகள் காரணமாக கைதிகள் வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார். வேறு சிறைச்சாலைகளுக்கு ...

Read More »