Home / உலகச் செய்திகள் (page 40)

உலகச் செய்திகள்

முதன் முறையாக ‘ஸ்டார் வார்ஸ்’ பொழுது போக்குப் பூங்கா டிஸ்னிலாண்டில் திறப்பு!!

டிஸ்னிலாண்டில் முதன் முறையாக ஸ்டார் வார்ஸ் திரைப்படத்தை நினைவுபடுத்தும் அரங்குகள் திறக்கப்பட்டுள்ளது. ஸ்டார் வார்ஸ் திரைப்படங்கள் உலகம் முழுவதும் லட்சக் கணக்கான ரசிகர்களைக் கவர்ந்துள்ளன. ஸ்டார் வார்ஸ் சாகசத் திரைப்படங்களின் கற்பனை உலகில் மூழ்கித் திளைத்த ரசிகர்கள் அந்த சூழலை நேரில் அனுபவிக்கும் வகையில் கலிஃபோர்னியாவில் உள்ள டிஸ்னி லேண்டில் 100 கோடி டாலர் மதிப்பீட்டில் ...

Read More »

வர்த்தகப் போரில் அமெரிக்காவுக்கு சீனா பதிலடி!!

வர்த்தகப் போரில் பதிலடி நடவடிக்கையாக 60 பில்லியன் டாலர்கள் மதிப்புள்ள அமெரிக்க இறக்குமதிப் பொருட்கள் மீது வரி விதிப்பை சீனா அதிகப்படுத்தியுள்ளது. வாஷிங்டனிலும், பெய்ஜிங்கிலும் நடைபெற்ற இருதரப்பு பேச்சுவார்த்தைதளில் எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை. இதையடுத்து அமெரிக்கா, சீன இறக்குமதிப் பொருட்கள் மீது வரி விதிப்பை அதிகப்படுத்தியது. இதற்கு பதிலடியாக, 60 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான அமெரிக்க ...

Read More »

ராணுவ வெடிபொருள் மையத்தில் வெடி விபத்து-2 பேர் பலி 20க்கும் மேற்பட்டோர் காயம்

ரஷ்ய ராணுவ மையம் ஒன்றில் நேரிட்ட வெடி விபத்தில், 2 பேர் உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அந்நாட்டின் மத்திய பகுதியில் உள்ள ஷெர்ஷின்ஸ்க் நகரில், ரஷ்ய ராணுவத்தின், வெடிபொருள் தயாரிப்பு கூடம் மற்றும் அதுபற்றி தொழில்நுட்பத்தை பயிற்றுவிக்கும் கல்வி நிறுவனமும் உள்ளது. இங்கு, சனிக்கிழமை, வெடி விபத்து ஏற்பட்டது. பெரும் புகைமண்டலத்துடன், வெடிபொருட்கள் உள்ளிட்டவை ...

Read More »

சவூதி இளவரசர் போல ஆடைகளை அணிந்து பண மோசடி செய்தவருக்கு 18 ஆண்டுகள் சிறை!!

அமெரிக்காவில், சவூதி இளவரசர் போல நடித்து, கோடிக்கணக்கில் பண மோசடி செய்த நபருக்கு 18 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. புளோரிடா மாகாணத்தைச் சேர்ந்த அந்தோணி ஜிக்னாக் (Anthony Gignac) எனும் அவர், சவூதி இளவரசர் போல ஆடைகளை அணிந்தும், போலியான ஆவணங்களைக் கொண்டும் ஏராளமானோரிடம் பண மோசடி செய்ததாக கூறப்படுகிறது. மோசடி செய்த பணத்தில் ...

Read More »

குழந்தைகள் உட்பட 700 பேருக்கும் மேல் எச்ஐவி பாதிப்பு!!

தெற்கு பாகிஸ்தானில் 500க்கும் மேற்பட்ட குழந்தைகள் உட்பட 700 பேருக்கும் மேல் எச்ஐவி பாதிப்பு இருப்பதாக கண்டறியப்பட்டது குறித்து உலக சுகாதார அமைப்பு ஆய்வினை தொடங்கி உள்ளது. பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள லர்கனாவின் வஸாயோ ((Wasayo)) கிராமத்தை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட குழந்தைகள் மற்றும் 200க்கும் மேற்பட்ட பெரியவர்களுக்கு எச்ஐவி பாதிப்பு உள்ளதாக சில ...

Read More »

“ஸ்கை” என்ற பெயரில் பறக்கும் வாகனத்தை வடிவமைத்த-அமெரிக்க நிறுவனம்

சுற்றுச்சூழலுக்கு உகந்த, எந்த மாசுவையும் வெளிப்படுத்தாத, ஹைட்ரஜன் எரிபொருளில் இயங்கும், பறக்கும் வாகனத்தை வடிவமைத்து, அமெரிக்க நிறுவனம் அறிமுகப்படுத்தியிருக்கிறது. அலக்கா-ஐ டெக்னாலஜிஸ் (Alaka’i Technologies) நிறுவனம், ஸ்கை (Skai {pronounce: sky}) என்ற பெயரில், 5 பேர் அமரக்கூடிய பறக்கும் வாகனத்தை வடிவமைத்திருக்கிறது. இந்த பறக்கும் வாகனம், ட்ரோன் தொழில்நுட்பத்தையும், ஹெலிகாப்டர் நுட்பத்தையும் அடிப்படையாக கொண்டு ...

Read More »

இலங்கை வருகிறார் அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர்!!

ஐக்கிய அமெரிக்காவின் அரசியல்-இராணுவ விவகாரங்களுக்கான உதவி இராஜாங்க செயலாளர் R. Clarke Cooper அடுத்த வாரம் இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளது. மே மாதம் 29 ஆம் திகதியில் இருந்து ஜூன் 7 ஆம் திகதி வரை உதவி இராஜாங்க செயலாளர் சிங்கப்பூர், இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கு விஜயம் ...

Read More »

இரு படகுகள் நேருக்கு நேர் மோதி கவிழ்ந்ததில் 7 பேர் பலி!!

ஹங்கேரி நாட்டில், இரு படகுகள் நேருக்கு நேர் மோதி கவிழ்ந்ததில் 7 பேர் உயிரிழந்தனர். ஹங்கேரியின் தலைநகரான புடாபெஸ்டில் (budapest) கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகின்றது. இதனால், ஆறுகள் நிரம்பி வழியும் நிலையில், அங்குள்ள தனுபே (Danube), ஆற்றில் தென்கொரிய நாட்டை சேர்ந்த சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்தனர். அவர்கள் நடு ...

Read More »

உலகிலேயே 245 கிராம் எடையுடன் பிறந்த சிறிய குழந்தை!!

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உலகிலேயே குறைவான எடை கொண்ட குழந்தை பிறந்துள்ளது. கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள மருத்துவனை ஒன்றில் வெறும் 245 கிராம் எடையுடன் பெண் குழந்தை பிறந்துள்ளது. பிறந்த போது ஆப்பிள் பழத்தின் எடையில் இருந்த இந்த குழந்தை தான் உலகிலேயே சிறிய குழந்தை என அறிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமான கர்ப்ப காலமான 40 வாரங்களில் 23 ...

Read More »

உடற்பயிற்சி மூலம் திருப்தியடையாமல் ஊசி மூலம் தசையை வளர்த்த ஆணழகன்!!

பிரேசில் நாட்டில், ஊசி மூலம் தனது மேல்கை தசையை கிட்டத்தட்ட 2 அடி உயரத்திற்கு உயர்த்திய ஆணழகனுக்கு மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சா பாலோ என்ற இடத்தைச் சேர்ந்த வால்டிர் செகாட்டோ என்பவர் உடற்பயிற்சி மீது தீராத காதல் கொண்டிருந்தார். இதற்காக உடற்பயிற்சி மையத்திற்குச் சென்று தனது உடலின் தசைகளை மேம்படுத்தினார். ஆனாலும் திருப்தியடையாத வால்டிர், ...

Read More »