Home / உலகச் செய்திகள் (page 165)

உலகச் செய்திகள்

ஏமன் விடுதி மீது நடந்த விமானத் தாக்குதலில் 35 பேர் பலி

ஏமன் தலைநகர் சனாவின் புறநகர்ப் பகுதியில் வான் தாக்குதலால் சேதமடைந்த விடுதியின் இடிபாடுகளிலிருந்து குறைந்தது 35 உடல்களை மீட்டுள்ளதாக ஹூதி கிளர்ச்சியாளர்கள் மற்றும் செம்பிறை மீட்புப் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.சனாவில் இருந்து 20 கி.மீ. தொலைவில், அர்ஹாப் மாவட்டத்தில் உள்ள இந்த இரண்டு அடுக்கு மாடி விடுதியின் மீது விமானங்கள் குண்டு வீசியதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் ...

Read More »

சொத்து குவிப்பு வழக்கு- சசிகலாவின் சீராய்வு மனு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி

சொத்து குவிப்பு வழக்கில் தண்டனையை உறுதி செய்த தீர்ப்பை எதிர்த்து சசிகலா, இளவரசி, சுதாகரன் தாக்கல் செய்த சீராய்வு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனை பெற்ற சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய மூவரும் கடந்த பிப்ரவரி 15ஆம் தேதி பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹார ...

Read More »

ஹாங்காங்கை துவம்சம் செய்த சூறாவளி ஹாடோ

அதிவேகமாக வீசிவரும் ஹாடோ சூறாவளியால் ஹாங்காங்கில் மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன; நூற்றுக்கணக்கான விமானப் பயணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன; பெருமளவு வர்த்தக நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன. காற்று வேகம் அதிகபட்சமாக மணிக்கு 192 கிலோமீட்டர் (119 மைல்) வரை எட்டியது. கடந்த ஐந்தாண்டுகளில் முதல் முறையாக 10-ம் எண் சூறாவளி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Read More »

டேங்கர்-போர்க்கப்பல் மோதல்: அமெரிக்க கடற்படை பிரிவின் கமாண்டர் நீக்கம்

எண்ணெய் டேங்கர் ஒன்றுடன் அமெரிக்க போர்க்கப்பல் மோதிய விபத்தை அடுத்து அமெரிக்க கடற்படையின் ஏழாவது கப்பல் தள பிரிவின் கமாண்டர் வைஸ் அட்மிரல் ஜோசப் அகாய்ன் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அமெரிக்க அதிகாரிகள் இத்தகவலை தெரிவித்துள்ளனர். சிங்கப்பூர் அருகே திங்கள்கிழமை நடந்த விபத்தில் யு.எஸ்.எஸ். ஜான் எஸ்.மெக்கெய்ன் என்ற போர்க்கப்பல் எண்ணெய் டேங்கர் ஒன்றுடன் மோதியதில் ...

Read More »

“நீட்” விவகாரம்: சென்னையில் நாளை ஆர்ப்பாட்டத்துக்கு திமுக அழைப்பு

தமிழகத்தில் “நீட்” தேர்வு முறையில் இருந்து மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு விலக்கு வழங்கும் நடவடிக்கையில் சரியாக செயல்படவில்லை எனக் கூறி, சென்னையில் நாளை ஆர்ப்பாட்டத்துக்கு எதிர்க்கட்சியான திமுக அழைப்பு விடுத்துள்ளது. இது குறித்து அக்கட்சியின் தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘நீட்’ தேர்வை திணித்து தமிழகத்தில் இட ஒதுக்கீட்டு கொள்கைக்கும், சமூக நீதிக் கொள்கைக்கும் ...

Read More »

பார்சிலோனாவில் பெரிய தாக்குதலை நடத்த திட்டமிட்டிருந்தோம்- சந்தேக நபர்

ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகரில் தாக்குதலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் குற்றவாளிகளில் ஒருவர், பெரிய தாக்குதல் ஒன்றை நடத்த திட்டமிட்டிருந்ததை ஒப்புக்கொண்டதாக ஸ்பெயின் நீதிமன்ற தகவல்கள் கூறுகின்றன கடந்த வாரம் ஸ்பெயினின் காட்டலோனியா நகரில் 15 பேரை பலி வாங்கிய தாக்குதலில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் நான்கு இஸ்லாமியவாத தீவிரவாதிகள் மேட்ரீட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். நான்கு பேரும் வட ...

Read More »

சீனாவின் வடகிழக்கு பகுதியில் தனிநபர் பாதுகாப்பு செயலி அறிமுகம்

மிங் வம்சத்தின் ரகசிய காவல்துறையை நினைவுபடுத்தும் விதமாக ஜினிவெய் என்று செயலிக்கு பெயரிடப்பட்டுள்ளது. சீனாவின் வட கிழக்கு பகுதியில் உள்ள ஒரு நகரத்தில் செல்வந்தர்கள் மற்றும் பிரபலங்கள் மட்டுமின்றி அனைவரும் தனிப்பட்ட பாதுகாவலர்களை வாடகைக்கு எடுத்துக் கொள்ளும் செயலி அறிமுகப்படுத்தவிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ‘ஜினிவேய்’ என்ற செயலி, செப்டம்பர் மாதம் ஷிண்டாவோவில் தொடங்கப்படவுள்ளது. ஊபர் போன்ற ...

Read More »

ரஷ்யத் தாக்குதலில் ஐ.எஸ் தீவிரவாதிகள் 200பேர் பலி..!

ஐ.எஸ். தீவிரவாதிகளின் ஆயுதகிடங்குகளை குறிவைத்து ரஷ்ய போர் விமானங்கள் குண்டு மழை பொழிந்ததைத் தொடர்ந்து 200 ஐ.எஸ். தீவிரவாதிகள் கொன்று குவிக்கப்பட்டனர். சிரியாவில் ஆதிக்கம் செலுத்தி வரக்கூடிய ஐ.எஸ். தீவிரவாதிகளை ஒழிக்க அமெரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகள் அங்கு தரை வழியாகவும், வான் வழியாகவும் தாக்குதலை நடத்திவருகின்றன. இந்நிலையில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள டெயிர் ...

Read More »

சிங்கப்பூர் அருகே அமெரிக்க போர் கப்பல் விபத்து: 10 மாலுமிகள் காணவில்லை

சிங்கப்பூருக்கு அருகே அமெரிக்க போர் கப்பலும், எண்ணெய் ஏற்றிச் சென்ற ஒரு கப்பலும் மோதி விபத்துக்குள்ளானதில் பத்து அமெரிக்க கடற்படை மாலுமிகள் காணாமல் காணாமல் போய் உள்ளதாகவும், ஐந்து மாலுமிகள் காயமடைந்துள்ளதாகவும் அமெரிக்க கடற்படை தெரிவித்துள்ளது. சிங்கப்பூர் கிழக்கு கடல் பகுதியில் யுஎஸ்எஸ் ஜான் எஸ். மக்கெயின் என்ற ஏவுகணை போர்கப்பல், துறைமுகத்தில் நிறுத்தத் தயாரான ...

Read More »

ஸ்பெயினில் தாக்குதலுக்கு தயாராக இருந்த 120 எரிவாயுக்கலன்கள் கண்டுபிடிப்பு

ஸ்பெயினில் இடம்பெற்றிருந்த இரட்டை பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் பதட்டத்தினை ஏற்படுத்தி இருக்க, தாக்குதலுக்கு தயாராக இருந்த 120 எரிவாயுக்கலன்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளமை அங்கு பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. குறித்த தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடையதாக கருதப்படும் ஐவரில் நால்வர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ள நிலையில், ஒருவர் தொடர்ந்தும் தேடப்படும் நபராக இருக்கின்றார். சம்பவங்களுடன் தொடர்புடைய நபர்களின் வீட்டினை சோதனை செய்த ...

Read More »