Home / உலகச் செய்திகள் (page 10)

உலகச் செய்திகள்

யூடியூப், ஜிமெயில் உள்ளிட்ட கூகுளின் செயலிகள் முடக்கம்!!

அமெரிக்காவில் அதிக படியான பயன்பாடு காரணமாக யூடியூப், ஜிமெயில் உள்ளிட்ட செயலிகள் சிறிது நேரம் முடங்கின. அமெரிக்காவிலும், ஐரோப்பிய நாடுகளில் சில பகுதிகளிலும் யூடியூப், ஜிமெயில் உள்ளிட்ட கூகுளின் செயலிகள் கிட்டத்தட்ட 2 மணி நேரத்திற்கு முடங்கின. மேலும் கூகுள் க்ளவுடினை (cloud) பயன்படுத்தும் மற்ற சில செயலிகளும் சிறிது நேரம் முடங்கின. இதுகுறித்து தெரிவித்துள்ள ...

Read More »

கிளர்ச்சியாளர்களைக் குறி வைத்து சிரியாவில் விமானத் தாக்குதல்!!

சிரியாவில் கிளர்ச்சியாளர்களைக் குறிவைத்து நடத்தப்படும் விமானத்தாக்குதல் அதிகரித்துள்ளது. அந்நாட்டின் வடமேற்கு பகுதியில் இருந்து அரசுக்கு எதிராக இயங்கும் போராளிகளைக் குறிவைத்து லாட்டானே மற்றும் கஃப்ர் ஸிடா ஆகிய பகுதிகளில் வான்வெளித் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த குண்டு வீச்சில் அப்பாவிகள் யாரும் கொல்லப்பட்டுள்ளனரா என்று கண்காணித்து வருவதாக சிரிய மனித உரிமை கண்காணிப்பு குழு தெரிவித்துள்ளது. முன்னதாக ...

Read More »

அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் இலங்கை விஜயம்!!

இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டு அவுஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சர் பீட்டர் டடின்  இலங்கை வரவுள்ளதாக இலங்கைக்கான அவுஸ்ரேலிய   தூதுவராலயம் அறிவித்துள்ளது. இந்த விஜயத்தின்போது இலங்கையின் உயர் மட்ட அரச  தரப்பினருடன் விஷேட கலந்துரையாடல்கள் இடம்பெறவுள்ளது. ஈஸ்டர் ஞாயிறு தினத்தில் தற்கொலை குண்டு தாக்குதல் இடம்பெற்ற  கட்டுவாபிடிய புனித செபஸ்தியன் தேவாலயத்தையும் பார்வையிடவுள்ளார். அனைவருக்கும் பகிருங்கள்! ...

Read More »

இரு நாடுகளுக்கிடையே போர் மூண்டால் உலகிற்கு பேரழிவு ஏற்படும்- சீனா எச்சரிக்கை!!

தைவான்  பிரச்சனையில் குறுக்கிடுவதை அமெரிக்கா கைவிட வேண்டும் என வலியுறுத்தியுள்ள சீனா, இரு நாடுகளுக்கிடையே போர் மூண்டால் உலகிற்கு பேரழிவு ஏற்படும் என  எச்சரித்துள்ளது. தைவான் நாடு தனது நாட்டின் ஒரு பகுதி என சீனா தொடர்ந்து உரிமை கொண்டாடி வருகிறது. தைவான் நாட்டிற்கு ஆதரவாக அமெரிக்கா செயல்படுவது சீனாவுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தி இருக்கிறது. தென் ...

Read More »

அமெரிக்காவின் விசா சட்டத்தில் புதிய நடைமுறை!!

அமெரிக்க விசாவுக்கு விண்ணப்பிப்போர், இனி தனது கடந்த 5 ஆண்டுகால சமூக ஊடக செயல்பாட்டை விளக்க வேண்டும் என்று புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பேஸ்புக், ஃபிளிக்கர், கூகுள், இன்ஸ்டாகிராம், லிங்கெடின், யூ டியூப் போன்றவற்றின் செயல்பாடுகள் மூலம் அந்த நபரின் 5 ஆண்டுக்கால வரலாறு ஆராயப்படும். கடந்த ஆண்டு செப்டம்பர் வரையிலான காலத்தில் இந்தியர்களுக்கு அமெரிக்கா ...

Read More »

முதன் முறையாக ‘ஸ்டார் வார்ஸ்’ பொழுது போக்குப் பூங்கா டிஸ்னிலாண்டில் திறப்பு!!

டிஸ்னிலாண்டில் முதன் முறையாக ஸ்டார் வார்ஸ் திரைப்படத்தை நினைவுபடுத்தும் அரங்குகள் திறக்கப்பட்டுள்ளது. ஸ்டார் வார்ஸ் திரைப்படங்கள் உலகம் முழுவதும் லட்சக் கணக்கான ரசிகர்களைக் கவர்ந்துள்ளன. ஸ்டார் வார்ஸ் சாகசத் திரைப்படங்களின் கற்பனை உலகில் மூழ்கித் திளைத்த ரசிகர்கள் அந்த சூழலை நேரில் அனுபவிக்கும் வகையில் கலிஃபோர்னியாவில் உள்ள டிஸ்னி லேண்டில் 100 கோடி டாலர் மதிப்பீட்டில் ...

Read More »

வர்த்தகப் போரில் அமெரிக்காவுக்கு சீனா பதிலடி!!

வர்த்தகப் போரில் பதிலடி நடவடிக்கையாக 60 பில்லியன் டாலர்கள் மதிப்புள்ள அமெரிக்க இறக்குமதிப் பொருட்கள் மீது வரி விதிப்பை சீனா அதிகப்படுத்தியுள்ளது. வாஷிங்டனிலும், பெய்ஜிங்கிலும் நடைபெற்ற இருதரப்பு பேச்சுவார்த்தைதளில் எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை. இதையடுத்து அமெரிக்கா, சீன இறக்குமதிப் பொருட்கள் மீது வரி விதிப்பை அதிகப்படுத்தியது. இதற்கு பதிலடியாக, 60 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான அமெரிக்க ...

Read More »

ராணுவ வெடிபொருள் மையத்தில் வெடி விபத்து-2 பேர் பலி 20க்கும் மேற்பட்டோர் காயம்

ரஷ்ய ராணுவ மையம் ஒன்றில் நேரிட்ட வெடி விபத்தில், 2 பேர் உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அந்நாட்டின் மத்திய பகுதியில் உள்ள ஷெர்ஷின்ஸ்க் நகரில், ரஷ்ய ராணுவத்தின், வெடிபொருள் தயாரிப்பு கூடம் மற்றும் அதுபற்றி தொழில்நுட்பத்தை பயிற்றுவிக்கும் கல்வி நிறுவனமும் உள்ளது. இங்கு, சனிக்கிழமை, வெடி விபத்து ஏற்பட்டது. பெரும் புகைமண்டலத்துடன், வெடிபொருட்கள் உள்ளிட்டவை ...

Read More »

சவூதி இளவரசர் போல ஆடைகளை அணிந்து பண மோசடி செய்தவருக்கு 18 ஆண்டுகள் சிறை!!

அமெரிக்காவில், சவூதி இளவரசர் போல நடித்து, கோடிக்கணக்கில் பண மோசடி செய்த நபருக்கு 18 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. புளோரிடா மாகாணத்தைச் சேர்ந்த அந்தோணி ஜிக்னாக் (Anthony Gignac) எனும் அவர், சவூதி இளவரசர் போல ஆடைகளை அணிந்தும், போலியான ஆவணங்களைக் கொண்டும் ஏராளமானோரிடம் பண மோசடி செய்ததாக கூறப்படுகிறது. மோசடி செய்த பணத்தில் ...

Read More »

குழந்தைகள் உட்பட 700 பேருக்கும் மேல் எச்ஐவி பாதிப்பு!!

தெற்கு பாகிஸ்தானில் 500க்கும் மேற்பட்ட குழந்தைகள் உட்பட 700 பேருக்கும் மேல் எச்ஐவி பாதிப்பு இருப்பதாக கண்டறியப்பட்டது குறித்து உலக சுகாதார அமைப்பு ஆய்வினை தொடங்கி உள்ளது. பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள லர்கனாவின் வஸாயோ ((Wasayo)) கிராமத்தை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட குழந்தைகள் மற்றும் 200க்கும் மேற்பட்ட பெரியவர்களுக்கு எச்ஐவி பாதிப்பு உள்ளதாக சில ...

Read More »