Home / சினிமா செய்திகள் / Abhijit Bichukale என்ற போட்டியாளரை பிக்பாஸ் வீடு புகுந்து காவல்துறை கைது செய்துள்ளனர்

Abhijit Bichukale என்ற போட்டியாளரை பிக்பாஸ் வீடு புகுந்து காவல்துறை கைது செய்துள்ளனர்

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த சில வருடங்களாக தென்னிந்தியாவில் அதிகம் ஈர்ப்பை பெற்று வருகிறது. இதில் தமிழில் பிக்பாஸ் சீசன் 3 நாளை ஒளிபரப்பாகிறது. நேற்றே இதன் ஷூட்டிங் தொடங்கிவிட்டது.

மராத்தி மொழியில் நடிகர் மகேஷ் மஞ்ரேக்கர் தொகுத்து வழங்க சீசன் 2 தற்போது ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் Abhijit Bichukale என்ற போட்டியாளரை பிக்பாஸ் வீடு புகுந்து காவல்துறை கைது செய்துள்ளனர்.

விசாரணையில் அவர் மீது கடந்த 2015 முதலே செக் மோசடி வழக்கு இருக்கிறதாம். பல முறை நீதிமன்ற சம்மன் அணுப்பியும் அவர் மதிக்கவில்லையாம்.

இதனால் நீதிமன்ற உத்தரவின் பேரில் மும்பையின் சதாரா காவல்துறை கைது செய்து இன்று நீதிமன்றத்தில் ஒப்படைத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

பிக்பாஸ் போட்டியாளர்கள் யாரும் போலிசாருக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லையாம்

 

About இனியவன்

x

Check Also

“பிகில்” போஸ்டர் காட்சியை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

அட்லி இயக்கத்தில் விஜய் மற்றும் நயன்தாரா நடித்து உருவாகியுள்ள படம் பிகில். அண்மையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. ...

%d bloggers like this: