Home / விளையாட்டுச் செய்திகள் / 90 கோடி ரூபா நஷ்ட ஈடு கோரியுள்ள ஹத்துருசிங்க RADIOTAMIZHA

90 கோடி ரூபா நஷ்ட ஈடு கோரியுள்ள ஹத்துருசிங்க RADIOTAMIZHA

இலங்கை கிரிக்கெட் அணியின் பதவியிலிருந்து நீக்கப்பட்ட சந்திக்க ஹத்துருசிங்க ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்திடமிருந்து 50 இலட்சம் அமெரிக்க டொலர்கள் (சுமார் 90 கோடியே 70 இலட்சம் இலங்கை ரூபா) நஷ்ட ஈடு கோரியுள்ளார்.

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான சந்திக்க ஹத்துருசிங்க, 2014 முதல் 2017 நவம்பர் வரை பங்களாதேஷ் அணியின் பயிற்றுநராக பதவிவகித்தவர்.

2017 டிசெம்பரில் அவர் இலங்கை அணியின் தலைமைப் பயிற்றுநராக நியமிக்கப்பட்டார். 3 வருட கால ஒப்பந்தத்தில் அவருக்கு நியமனம் வழங்கப்பட்டது.

எனினும், சந்திக்க ஹத்துருசிங்வின் ஒப்பந்த காலத்தில் 18 மாதங்கள் எஞ்சியிருந்த நிலையில் கடந்த வருடம் அவர் பயிற்றுநர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.

இந்நிலையில், தனக்கு 50 இலட்சம் டொலர் இழப்பீடு வேண்டும் என சந்திக்க ஹத்துருசிங்க கோரி கடிதம் அனுப்பியுள்ளார் என ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் செயலாளர் மொஹான் டி சில்வா தெரிவிததுள்ளார்.

தனது எஞ்சிய 18 மாதங்களுக்கான சம்பளத்துடன் இழப்பீடுகளையும் வழங்க வேண்டும் என சந்திக்க ஹத்துருசிங்க கோரியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், அவருக்கு 6 மாதங்களுக்கான ஊதியத்தையே வழங்க ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் முன்வந்தது.

பதவி நீக்கப்படும்போது சந்திக்க ஹத்துருசிங்க மாதாந்தம் 60,000 அமெரிக்க டொலர்கள் (தற்போதைய நாணய மதிப்பில் சுமார் ஒரு கோடியே 8 லட்சத்து 84ஆயிரம் ரூபா) ஊதியமாக பெற்று வந்தார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

RADIOTAMIZHA | 2021 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கு இந்திய அணி தகுதி..!

2021ஆம் ஆண்டுக்கான மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் பங்கேற்பதற்கு இந்திய மகளிர் அணி தகுதி பெற்றுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் ...