Home / உள்நாட்டு செய்திகள் / 700 பெண் தலை­மைத்­து­வக் குடும்­பங்­க­ளின் நுண்நிதி கடன்கள் தள்ளுபடி!!

700 பெண் தலை­மைத்­து­வக் குடும்­பங்­க­ளின் நுண்நிதி கடன்கள் தள்ளுபடி!!

நுண்­நி­திக் கட­னைப் பெற்று அதனை மீளச் செலுத்த முடி­யாத 700 பெண் தலை­மைத்­து­வக் குடும்­பங்­க­ளின்    கடன்­கள் முழு­மை­யாகத் தள்­ளு­படி செய்­யப்­பட்­டுள்­ளன.

இந்த சான்­றி­தழ் வழங்­கும் நிகழ்வு நாளை மறு­தி­னம் வியா­ழக்கிழமை யாழ்ப்­பா­ணம் வீர­சிங்­கம் மண்­ட­பத்­தில் காலை 10 மணிக்கு நிதி அமைச்­சர் மங்­கள சம­ர­வீர தலை­மை­யில் இடம்­பெ­ற­வுள்­ளது என அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

ஐ.நா. மனித உரி­மை­கள் சபை அமர்­வில் நுண் நிதிக் கடன் தொடர்­பில் ஐ.நாவின் சிறப்பு அறிக்­கை­யா­ளர்         முன்­வைத்­துள்ள அறிக்கை விவா­திக்­கப்­ப­ட­வுள்ள நிலை­யில் இந்­தச் செயற்­பாடு அரசினால் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளது.

2017ஆம் ஆண்டு காலப் பகு­தி­யில்  வடக்­கில் அதி­க­ள­வில் நுண்­நி­திக் கடன்­கள் பெறப்­பட்­டன.                                     பெண்தலை­மைத்­து­வக் குடும்­பங்­க­ளால் அவை அதி­க­ள­வில் பெற்­றுக்  கொள்ளப்பட்டுள்ளன.

நுண்­நி­திக் கடன்­களை மீளச் செலுத்த முடி­யா­மல் பலர் தவ­றான முடி­வு­களை எடுத்து உயி­ரி­ழந்­த­னர். நுண்­நி­திக் கடன்­களை வசூ­லிக்­கச் செல்­வோர் வரம்பு மீறிச் செயற்­பட்­ட­து­டன், பெண் தலை­மைத்­து­வக் குடும்­பங்­க­ளி­டம் பாலி­யல் லஞ்­ச­மும் கோரப்­பட்­டி­ருந்­தது.

இதனால் 2018ஆம் ஆண்­டுக்­கான வரவு – செல­வுத் திட்­டத்­தில் நுண்­நி­திக் கடன்­களை தள்­ளு­படி செய்­யும் யோசனை முன்­வைக்­கப்­பட்­டி­ருந்­தது. அதற்கு அமை­வாக வடக்­கைச் சேர்ந்த 700 பெண் தலை­மைத்­து­வக்        குடும்­பங்­க­ளின் நுண்­நி­திக் கடன் தள்­ளு­படி செய்­யப்­பட்­டுள்­ளது.

இந்த சான்­றி­தழ் வழங்­கும் நிகழ்வு நாளை மறு­தி­னம் வியா­ழக்­கி­ழமை யாழ்ப்­பா­ணம் வீர­சிங்­கம் மண்­ட­பத்­தில் காலை 10 மணிக்கு வைத்து பய­னா­ளி­க­ளி­டம் கைய­ளிக்­கப்­ப­ட­வுள்­ளது.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்

LIKE-Facebook

 

About அகமுகிலன்

x

Check Also

குண்டுத் தாக்குதல்களுக்கு பொறுப்பானவர்கள் அனைவருக்கும் மரணதண்டனை

நாட்டில் நடத்தப்பட்ட தொடர் குண்டுத் தாக்குதல்களுக்கு பொறுப்பானவர்கள் அனைவருக்கும் மரணதண்டனை வழங்கப்பட வேண்டுமென இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ...

%d bloggers like this: