Home / விளையாட்டுச் செய்திகள் / 6 பந்துகளில் 6 சிக்சர்கள் அடித்து சாதனை RADIOTAMIZHA

6 பந்துகளில் 6 சிக்சர்கள் அடித்து சாதனை RADIOTAMIZHA

நியூசிலாந்தில் நடைபெற்ற உள்ளூர் கிரிக்கெட் போட்டியில், வீரர் ஒருவர் ஒரே ஓவரில் 6 சிக்சர்கள் விளாசி, சாதனை படைத்துள்ளார்.

நியூசிலாந்தில் சூப்பர் ஸ்மாஷ் என்ற உள்ளூர் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இதில், கேண்டர்பரி அணிக்காக களமிறங்கிய லியோ கார்டர், 16ஆவது ஓவரில், நார்த்தென் நைட்ஸ் அணி வீரர் ஆண்டன் டெவிசிக் வீசிய பந்துகளை (Anton Devcich) எதிர்கொண்டார்.

அந்த ஓவர் முழுவதும் வெளுத்துவாங்கிய லியோ கார்டர் தொடர்ச்சியாக 6 பந்துகளையும் அநாயசமாக சிக்சருக்கு தூக்கினார். லியோ கார்டரின் அதிரடியால், அவரது அணியும் எளிதில் வெற்றி பெற்றது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

இலங்கை கிரிக்கெட் அணி ஸிம்பாப்வே பயணம் RADIOTAMIZHA

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை இந்தியாவில் இவ் வருடம் தோல்வியுடன் ஆரம்பித்த இலங்கை, முதலாவது வெற்றியை சுவைக்கும் நம்பிக்கையுடன் ஸிம்பாப்வே நோக்கி ...

%d bloggers like this: