Home / இந்திய செய்திகள் / 38ஆவது பிறந்தநாளை கொண்டாடும் எம்.எஸ்.தோனி-வீடியோ உள்ளே

38ஆவது பிறந்தநாளை கொண்டாடும் எம்.எஸ்.தோனி-வீடியோ உள்ளே

இந்திய அணியின் மூத்த வீரரான எம்.எஸ்.தோனிக்கு பலரும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் தற்போதைய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனுமான மகேந்திர சிங் தோனி, தனது 38ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.

அவர் தனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் கேக் வெட்டி கொண்டாடும் புகைப்படம் மற்றும் வீடியோக்களை தோனியின் மனைவி சாக்ஷி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தோனியின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் இந்திய அணி வீரர்கள் ஹர்திக் பாண்டியா, ரிஷப் பந்த் மற்றும் கேதர் ஜாதவ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் தோனிக்கு கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் உட்பட பலரும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இந்திய அணியின் முன்னாள் வீரர் சேவாக், தோனியை கிரிக்கெட் உலகின் ஆச்சர்யம் என வர்ணித்துள்ளார்.

தமிழில் தோனிக்கு வாழ்த்து தெரிவித்துள்ள ஹர்பஜன் சிங், தோனியை ஒட்டு மொத்த கிரிக்கெட் உலகிற்கும் தல என்று புகழ்ந்துள்ளார். மேலும் உலகக்கோப்பையை வென்று வா எனவும் அவர் தோனியை வாழ்த்தி உள்ளார். இதே போல விவிஎஸ். லட்சுமணன், மிதாலிராஜ், தவான் என பலரும் தோனிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

தோனியின் ரன் அவுட்டை பார்த்து அதிர்ச்சியடைந்த இருவர் மாரடைப்பால் பலி!!

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில் தோனியின் ரன் அவுட்டை பார்த்து, அதிர்ச்சியடைந்த கிரிக்கெட் ரசிகர் ஒருவர் மாரடைப்பால் ...

%d bloggers like this: