Home / உலகச் செய்திகள் / 2ஆவது முறையாக மீண்டும் ஜஸ்டின் ட்ரூடோ பிரதமராகிறார்

2ஆவது முறையாக மீண்டும் ஜஸ்டின் ட்ரூடோ பிரதமராகிறார்

கனடா நாட்டின் நாடாளுமன்றத் தேர்தலில், பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான லிபரல் கட்சி, மீண்டும் வெற்றி பெற்றிருக்கிறது.

பெரும்பான்மையை இழந்திருந்தாலும் ஜஸ்டின் ட்ரூடோ மைனாரிட்டி ஆட்சியை அமைக்கவிருக்கிறார். உலகளவில், முற்போக்கு சிந்தனையுள்ள தலைவர்களில் ஒருவராக, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பார்க்கப்படுகிறார்.

இருப்பினும், ஆளும் லிபரல் கட்சிக்கு எதிராக அரசியல் செய்து வரும், வலதுசாரி சிந்தனையுடைய பழமைவாத கட்சிக்கு, முந்தைய தேர்தலைக் காட்டிலும் அதிக இடங்கள் கிடைத்திருக்கின்றன.

மொத்தமுள்ள 338 இடங்களுக்கு நடைபெற்ற தேர்தலில், பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான லிபரல் கட்சி, 156 இடங்களை பெற்றுள்ளது. இருப்பினும், பெரும்பான்மைக்குத் தேவைப்படுவதை விட 14 இடங்கள் குறைவாகவே, ஜஸ்டின் ட்ரூடோவுக்கு கிடைத்துள்ளது.

கனடாவின் எதிர்க்கட்சியான பழமைவாத கட்சி 122 இடங்களை தனதாக்கியுள்ளது. கடந்த முறை, 95 இடங்களை வென்ற நிலையில் இம்முறை, கூடுதலாக 27 இடங்களை வென்றுள்ளது. பெரும்பான்மை பலம் இல்லாததால், பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, மைனாரிட்டி ஆட்சியமைக்கு நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார். இந்திய வம்சாவளியினரான ஜக்மீத் சிங் (Jagmeet Singh) தலைமையிலான புதிய ஜனநாயக கட்சி குறிப்பிடத்தக்க இடங்களை வென்றிருப்பதால், கிங் மேக்கராக மாறியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE   

About இனியவன்

x

Check Also

பாகிஸ்தான் அகதிகள் 31 பேர் இத்தாலி அதிகாரிகளிடம் சிக்கினர்.

பிரான்ஸ் நாட்டில் இத்தாலி எல்லையில் லாரியை மடக்கி சோதனை நடத்தியபோது அதனுள் இருந்த பாகிஸ்தான் அகதிகள் 31 பேர் இத்தாலி ...

%d bloggers like this: