Home / இன்றைய நாள் எப்படி / இன்றைய நாள் எப்படி 15/03/2018

இன்றைய நாள் எப்படி 15/03/2018

இன்று!

ஹேவிளம்பி வருடம், பங்குனி மாதம் 1ம் தேதி, ஜமாதுல் ஆகிர் 26ம் தேதி,
15.3.2018 வியாழக்கிழமை, தேய்பிறை, திரயோதசி திதி மாலை 5:53 வரை;
அதன் பின் சதுர்த்தசி திதி, அவிட்டம் நட்சத்திரம் மாலை 5:40 வரை;
அதன்பின் சதயம் நட்சத்திரம், சித்த, மரணயோகம்.

* நல்ல நேரம் : காலை 10:30-12:00 மணி
* ராகு காலம் : மதியம் 1:30-3:00 மணி
* எமகண்டம் : காலை 6:00-7:30 மணி
* குளிகை : காலை 9:00-10:30 மணி
* சூலம் : தெற்கு

பரிகாரம் : தைலம்
சந்திராஷ்டமம் : பூசம், ஆயில்யம்
பொது : மாத சிவராத்திரி, தட்சிணாமூர்த்தி, சிவன் வழிபாடு, சுபமுகூர்த்தநாள்.

மேஷம்: வாழ்வில் இருந்த தடை, குறுக்கீடு விலகும். தொழில் வியாபார வளர்ச்சி பெற தகுந்த பணிகளில் புரிவீர்கள். உபரி வருமானம் கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு விவகாரங்களில் அனுகூலத் தீர்வு வந்து சேரும். விரும்பிய உணவு உண்டு மகிழ்வீர்கள்.

ரிஷபம்: பேச்சில் வசீகரம், மங்கலம் நிறைந்திருக்கும்.தொல்லை கொடுத்தவர் இடம் மாறிச் செல்வர். தொழிலில் உற்பத்தி விற்பனை அதிகரிக்கும். சேமிக்கும் விதத்தில் வருமானம் வரும். அரசு வகையில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.

மிதுனம்: எதிர் வரும் சிரமங்களை தாமதமின்றி சரி செய்யவும். நல்லவர்களின் ஆலோசனை நன்மைக்கு வழிவகுக்கும். தொழில், வியாபாரத்தில் அளவான மூலதனம் போதும். அதிக உழைப்பினால் பணவரவு சீராகும் .வாகன பாதுகாப்பில் உரிய கவனம் பின்பற்ற வேண்டும்.

கடகம்: முக்கிய பணி நிறைவேற தாமதமாகலாம். தொழில் வியாபாரத்தில் லாபம் சராசரி அளவில் இருக்கும். அடுத்தவர் பார்வையில் அதிக பணம் செலவழிக்க வேண்டாம். சீரான ஓய்வு ஆரோக்கியம் பெற உதவும். பெண்கள் குடும்ப நலனுக்காக பாடுபடுவர்.

சிம்மம்: நீண்டநாள் முயற்சி வெற்றி பெற எளிதான வழி பிறக்கும். நண்பர் தேவையான உதவியை மனமுவந்து வழங்குவர். தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வருமானம் திருப்தியளிக்கும். வெளியூர் பயணம் பயனறிந்து மேற்கொள்வீர்கள்.

கன்னி: சாந்த குணத்துடன் பிறருடன் பழகுவீர்கள். செயல்களில் வெற்றி பெற தேவையான அனுகூலம் கிடைக்கும் .தொழில் வியாபாரத்தில் அபரிமிதமான வளர்ச்சி நிலை உருவாகும் .தாராள பணவரவு கிடைக்கும் .குடும்பத்தில் சுப நிகழ்ச்சி நடத்த திட்டமிடுவீர்கள்.

துலாம்: பரிகாசத்துடன் பேசுபவரிடம் விலகுவது நல்லது. தொழிலில் திட்டமிட்ட இலக்கை அடைய கூடுதல் காலஅவகாசம் தேவைப்படும். பெண்களுக்கு வீட்டுச்செலவுக்கு பணத்தேவை அதிகரிக்கும். வாகன போக்குவரத்தில் மிதவேகம் பின்பற்றவும்.

விருச்சிகம்: குடும்பத்தினரின் தேவையறிந்து செயல்படுவீர்கள். மற்றவரை நம்பி பிறருக்கு வாக்குறுதி தர வேண்டாம்.தொழில் வியாபாரத்தில் நிலுவைப்பணி நிறைவேற்றுவது நல்லது. கூடுதல் உழைப்பினால் பணவரவு சீராகும். கண்களின் பாதுகாப்பில் தகுந்த கவனம் வேண்டும்.

தனுசு: கலை உணர்வுடன் நண்பரிடம் பேசி மகிழ்வீர்கள். வாழ்வில் எதிர்கொண்ட சிரமங்களை திறம்பட சமாளிப்பீர்கள். தொழில் வியாபார வளர்ச்சிக்காக கடினமாக உழைப்பீர்கள். சேமிப்பு உயரும். குடும்பத்தின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.

மகரம்: சிலர் தவறான ஆலோசனை சொல்லலாம் கவனம். அவப்பெயர் வராத வகையில் செயல்படுவீர்கள்.தொழில் வியாபாரத்தில் போட்டி அதிகரிக்கும். லாபம் சுமாராக இருக்கும். இஷ்ட தெய்வ வழிபாடு செய்வது மனஅமைதி பெற உதவும்.

கும்பம்: பணிகளில் தன்னம்பிக்கையுடன் ஈடுபடுவீர்கள். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி நிலை அதிகரிக்கும்.உபரி வருமானம் கிடைக்கும்.புத்திரர் விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள். குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிலைக்கும்.

மீனம்: சிலரது பேச்சு உங்களை சங்கடப்படுத்தலாம். தொழில், வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். பணியாளர்கள் பணிச்சுமைக்கு ஆளாவர். பெண்கள் பிள்ளைகளின் நலனில் கவனம் செலுத்துவர். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.

About இனியவன்

x

Check Also

இன்றைய நாள் எப்படி 15/02/2019

இன்று! விளம்பி வருடம், மாசி மாதம் 3ம் தேதி, ஜமாதுல் ஆகிர் 9ம் தேதி, 15.2.19 வெள்ளிக்கிழமை வளர்பிறை, தசமி ...

%d bloggers like this: