Home / உள்நாட்டு செய்திகள் / 140 கிலோகிராம் கேரளக்கஞ்சா கண்டுபிடிப்பு!!

140 கிலோகிராம் கேரளக்கஞ்சா கண்டுபிடிப்பு!!

மன்னார் – பேசாலை கடற்பகுதியில் கைவிடப்பட்டிருந்த 140 கிலோகிராமிற்கும் மேற்பட்ட கேரளக்கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

கடலில் நங்கூரமிடப்பட்டிருந்த ட்ரோலர் படகொன்றிலிருந்து நேற்று (05) மாலை கேரளக்கஞ்சா கைப்பற்றப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்தனர்.

பேசாலை கடற்பரப்பில் முன்னெடுக்கப்பட்ட சோதனையின் போதே கேரளக்கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

எனினும், குறித்த படகிலிருந்த சந்தேகநபர்கள் தப்பிச்சென்றுள்ளதாக கடற்படையினர் குறிப்பிட்டனர்.

கைப்பற்றப்பட்ட கேரளக்கஞ்சாவையும் ட்ரோலர் படகையும் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக தலைமன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் பாதுகாப்பு சோதனைக்கு தன்னியக்க இயந்திரம்!!

யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்துக்கு வருபவர்களை பாதுகாப்புக்கா சோதனை செய்வதற்கு தன்னியக்க இயந்திரம் ஆலயத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. வடக்கு மாகாண ...

%d bloggers like this: