பல்கலைக்கழக கல்விசார பணியாளர்களால் ஆரம்பிக்கப்பட்ட தொடர் பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்று 12வது நாளாகவும் தொடர்கிறது.

வேதன அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து குறித்த போராட்டம் கடந்த மாதம் 28ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு, இன்று 12வது நாளாகவும் தொடர்கிறது.

இதன் காரணமாக, பல்கலைக்கழகத்தில் இடம்பெறும் பரீட்சைகள் திகதி அறிவிப்பின்றி பிற்போடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கோரிக்கைகள் குறித்து இதுவரையில் எந்த அதிகாரியும் கவனம் செலுத்த வில்லை என பல்கலைக்கழக தொழிற்சங்களின் ஒன்றிணைந்த கூட்டணியின் தலைவர் ஹெட்வர்ட் மல்வத்தகே தெரிவித்துள்ளார்.