Home / உலகச் செய்திகள் / 103 வயது மூதாட்டி 100 மீட்டர் ஓட்டப் போட்டியில் வென்று சாதனை!!

103 வயது மூதாட்டி 100 மீட்டர் ஓட்டப் போட்டியில் வென்று சாதனை!!

அமெரிக்காவில் 103 வயது மூதாட்டி 100 மீட்டர் ஓட்டப் போட்டியில் வென்று படைத்த சாதனை அனைவரையும் வியக்க வைத்தது.

நியூ மெக்ஸிகோவில் உள்ள அல்புக்யுர்க்யூ (Albuquerque)-வில் மூத்த குடிமக்களுக்கான 100 மீட்டர் ஓட்டப் போட்டி நடத்தப்பட்டது. அதில் பங்கேற்ற ஜூலியா எனும் 103 வயது மூதாட்டி 45.62 விநாடிகளில் இலக்கை எட்டி அசத்தினார்.

முதன் முறையாக ஓட்டப் போட்டியில் தனது 101-வது வயதில் பங்கெடுத்த போது ஜூலியா 39.62 விநாடிகளில் இலக்கை எட்டி புதிய சாதனை படைத்தார். இது தற்போது வென்றதை விட 6 விநாடிகள் குறைவாகும். இவரது வேகத்தைக் கண்டு புயல் எனவும் பார்வையாளர்கள் புனைப்பெயரிட்டனர்.

இந்த வயதிலும் தனது ஒரு ஏக்கர் தோட்டத்தில் உள்ள மரம் செடிகளை பாதுகாக்கும் ஜூலியா, அமைதி, இசை, உடற்பயிற்சி, நண்பர்கள், நல்ல குடும்பம், தோட்டக்கலை உள்ளிட்டவையே தனது நீண்ட ஆயுளுக்குக் காரணம் என்றார்.

தனக்கு 103 வயதாகிவிட்டதாலும், தான் இன்னும் பல பந்தயங்களில் பங்கேற்க விரும்புவதாலும் பெரும்பாலும் ஓட்டப் பயிற்சியில் தனது சக்தியை வீணடிப்பதில்லை என்றும் அவர் பெருமிதத்தோடு குறிப்பிட்டார்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

2ஆவது முறையாக மீண்டும் ஜஸ்டின் ட்ரூடோ பிரதமராகிறார்

கனடா நாட்டின் நாடாளுமன்றத் தேர்தலில், பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான லிபரல் கட்சி, மீண்டும் வெற்றி பெற்றிருக்கிறது. பெரும்பான்மையை இழந்திருந்தாலும் ...

%d bloggers like this: