Home / உலகச் செய்திகள் / ஹைதியில் அதிபர் பதவி விலக்கோரி போராட்டம்…!!

ஹைதியில் அதிபர் பதவி விலக்கோரி போராட்டம்…!!

ஏழ்மை நாடான ஹைதியில் அதிபர் பதவி விலக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் போலீசார் கட்டுக்குள் கொண்டுவர முயற்சித்தனர்.

கரீபியன் தீவான ஹைதியில் உணவு தட்டுப்பாடு, எரிபொருள் பற்றாக்குறை, பணமதிப்பு பலவீனம் மற்றும் ஊழலை கண்டித்து ஆங்காங்கே போராட்டங்கள் வெடித்து வருகின்றன. கடந்த மாதம் அந்நாட்டு அதிபர் ஜோவெனெல் மோய்சே பதவி விலக்கோரி போராட்டம் நடத்தப்பட்டதால் பள்ளிகள், அரசு அலுவலங்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் மூடப்பட்டன.

இந்த நிலையில், தலைநகர் போர்ட் -ஓ-பிரின்ஸ் நகரில் வெள்ளிக்கிழமை மீண்டும் போராட்டம் வெடித்தது. சாலையில் திரண்ட மக்கள் அதிபருக்கு எதிராக குரலெழுப்பியதுடன், ஆங்காங்கே டயர்களை கொளுத்தியும், ஆயுதங்களை கையில் ஏந்தியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து அங்கு விரைந்த பாதுகாப்புப்படை வீரர்கள் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியும், லேசான தடியடி நடத்தியும் அவர்களை கட்டுக்குள் கொண்டுவர முயற்சித்தனர். இதேபோல் நீண்ட நாட்களாக நீடித்து வரும் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை கண்டித்து கடந்த ஆண்டு நடைபெற்ற போராட்டத்தில் 17 பேர் கொல்லப்பட்டதாகவும், 189 பேர் படுகாயமடைந்ததாகவும் அந்நாட்டு மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE   

About இனியவன்

x

Check Also

கண்ணுக்குப் புலப்படாத வகையிலான மையை தயாரித்து கட்டுரை எழுதிய மாணவி

ஜப்பானில் கண்ணுக்குப் புலப்படாத வகையிலான மையை தயாரித்து கட்டுரை எழுதிய மாணவிக்கு பேராசிரியர் அதிக மதிப்பெண் வழங்கியுள்ளார். நிஞ்சா வரலாற்றில் ...

%d bloggers like this: