Home / உள்நாட்டு செய்திகள் / ஹம்பாந்தோட்டையில் அதிசக்திவாய்ந்த வெடிப்பொருட்கள் மீட்பு!!

ஹம்பாந்தோட்டையில் அதிசக்திவாய்ந்த வெடிப்பொருட்கள் மீட்பு!!

ஹம்பாந்தோட்டை கீழ் அந்தரவௌ பகுதியில், அதிசக்திவாய்ந்த 250 கிலோ கிராம் வெடிப்பொருட்கள் நேற்றைய தினம் சூரியவௌ விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

வெடிப்பொருட்களை எடுத்துச் சென்ற பாரவூர்தியை சோதனையிடுவதற்காக நிறுத்தக்கோரி போதும், நிறுத்தாது வேகமாக ஓட்டிச் சென்றுள்ள நிலையில் விசேட அதிரடிப்படையினர் துரத்திச் சென்று பாரவூர்தியை கைப்பற்றியுள்ளதுடன் சந்தேகநபர்கள் இருவரையும் கைது செய்துள்ளனர்.

இதனையடுத்து கைப்பற்றப்பட்ட வெடி பொருட்களுடன் சந்தேகநபர்கள் ஹம்பாந்தோட்டை காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் அவர்கள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE

 

 

About அகமுகிலன்

x

Check Also

தென் மாகாணத்தை தாக்கியுள்ள – “இன்புளுவன்சா“ நோய்!!

காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் இன்புளுவன்சா நோயின் தாக்கம் அதிகரித்துள்ளது என தெரிவிக்கப்படுகிறது. காலி, கராப்பிட்டி, பலப்பிட்டி, எல்பிட்டி ஆகிய ...

%d bloggers like this: