Home / உள்நாட்டு செய்திகள் / ஹட்டன் நோர்வுட் பகுதியில் விபத்து- ஒரு குழந்தை உட்பட ஐவர் படுகாயம்!!

ஹட்டன் நோர்வுட் பகுதியில் விபத்து- ஒரு குழந்தை உட்பட ஐவர் படுகாயம்!!

ஹட்டன் நோர்வுட் பகுதியில் இன்று காலை 6 மணியளவில் இடம்பெற்ற முச்சக்கரவண்டி விபத்தில் ஒரு குழந்தை உட்பட ஐவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சிவனொளிபாதமலைக்கு சென்று பதுளை நோக்கி  திரும்பிக்கொண்டிருந்த போது ஹட்டன் நோர்வுட் பகுதியில் குறித்த இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த நிலையில் குறித்த விபத்தில் காயமடைந்தவர்கள் கிலங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த விபத்து தொடர்பில் நோர்வுட் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE

 

 

About அகமுகிலன்

x

Check Also

சூரியசக்தி மறுமலர்ச்சி வேலைத்திட்டம்!!

2030 ஆம் ஆண்டளவில் இலங்கையின் மின்வலு உற்பத்தி வலைப்பின்னலில் 60 சதவீதத்தை புதுப்பிக்கக் கூடிய மின்வலு தோற்றுவாய்கள் மூலம் மின் ...

%d bloggers like this: