Home / உள்நாட்டு செய்திகள் / ஹட்டனில் பழமை வாய்ந்த கைத்துப்பாக்கி மீட்பு!!

ஹட்டனில் பழமை வாய்ந்த கைத்துப்பாக்கி மீட்பு!!

ஹட்டன் தனியார் பஸ் நிலையப் பகுதியில் கைத்துப்பாக்கியொன்றை நேற்று 14  பொலிஸார் மீட்டுள்ளனர்

ஹட்டன் டிக்கோயா நகர சபையினர், குறித்த பஸ் நிலையப் பகுதியிலுள்ள பொது மலசலகூடத்திற்கு அருகில் குழியொன்றைத் தோண்டிக்கொண்டிருந்த போது,  குறித்த கைத்துப்பாக்கி தென்பட்டுள்ளது.

இது தொடர்பாக நகர சபை ஊழியர்கள் தமக்கு வழங்கிய தகவலையடுத்து, குறித்த இடத்துக்குச் சென்று துப்பாக்கியை மீட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த கைதுப்பாக்கியானது  பழமை வாய்ந்ததாகவும்  துருப்பிடித்தும் காணப்படுவதுடன்,  துப்பாக்கியிலுள்ள இலக்கங்கள் அழிந்து காணப்படுவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE

 

 

 

About அகமுகிலன்

x

Check Also

100 கிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது!!

புத்தளம் – கற்பிட்டி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின் போது 100 கிராம் கேரள கஞ்சாவுடன் நபரொருவர், கடற்படையால் கைது ...

%d bloggers like this: