Home / உலகச் செய்திகள் / விமான விபத்துக்கான காரணம் வெளியாகியது

விமான விபத்துக்கான காரணம் வெளியாகியது

நேபாளத் தலைநகர் காத்மாண்டு சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்க முனைந்தபோது விமானம் பற்றி எரிந்தது.

வங்கதேச தலைநகர் டாக்காவிலிருந்து, 67 பயணிகள், 4 விமானப் பணிக்குழுவினர் ஆகிய 71 பேருடன், யு.எஸ்.-பங்க்ளா ஏர்லைன்ஸ் (US-Bangla Airlines) விமானம் காத்மாண்டு வந்தது.

அங்கு திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தை நெருங்கியதும், விமான தரையிறங்க அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் சரியான திசையில் தரையிறங்காமல் ஓடுதளத்திலிருந்து விலகியதாக தகவல்கள் வெளியானது.

விமான நிலையத்தின் அருகே உள்ள கால்பந்து மைதானத்தை நோக்கி சென்றதில், தடுப்புச்சுவரில் விமானத்தின் சக்கரம் உரசியதில் தீ பற்றியது.

கண்ணிமைக்கும் நேரத்தில் விமானம் தீ பற்றி எரிந்தது. விமானத்தின் சிதைந்த பாகங்களிடையே காயங்களுடன் சிக்கியிருந்த 21 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

50 பேர் சடலங்களாக மீட்கப்பட்டதாக மீட்புக்குழுவினர் தெரிவித்திருந்தமை சுட்டிக்காட்டதக்கது.

இதனிடையே தீவிபத்துக்கான காரணம் குறித்து யு.எஸ்.-பங்க்ளா ஏர்லைன்ஸ் நிறுவனமும், விமானநிலைய கட்டுப்பாட்டறை அதிகாரிகளும் இருவேறு தகவல்களை கூறியுள்ளனர்.

விமான நிலைய மேலாளரான ராஜ்குமார் சேத்ரி கூறியதாவது;

கட்டுப்பாட்டறையிலிருந்து அனுப்பப்பட்ட தகவல்களை விமானி பின்பற்றவில்லை .

வடக்கு திசையிலிருந்து தரையிறங்குவதற்கான அனுமதி கிடைத்தபின்னர் வடகிழக்கு திசையை நோக்கியவாறு விமானம் இருமுறை வட்டமிட்டுள்ளது.

அத்துடன் இது குறித்து எச்சரிக்கப்பட்டதாகவும், ஆனால் விமானி தரப்பிலிருந்து ஆபத்துக்குரிய எந்த சமிக்ஞையும் தங்களுக்கு கிடைக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

ஆனால் தவறான வழிநடத்துதலே இந்த விமான விபத்துக்கு பிரதான காரணம் என யு.எஸ்.-பங்க்ளா ஏர்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

நேபாள விமான நிறுவனங்கள் மோசமான சேவை வழங்குபவையாக பட்டியலிடப்பட்டு ஐரோப்பிய யூனியனில் தடை செய்யப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

About இனியவன்

x

Check Also

மெக்சிகோ எல்லையில் தடுப்புச் சுவர் எழுப்ப அவசர நிலைப் பிரகடனத்தில் கையெழுத்திட்ட டிரம்ப்!

அமெரிக்கா- மெக்சிகோ எல்லையில் தடுப்புச் சுவர் எழுப்ப வேண்டிய நிதியைப் பெறுவதற்காக அவசர நிலைப் பிரகடனத்தில் அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார் ...

%d bloggers like this: