Home / உள்நாட்டு செய்திகள் / வானிலை குறித்து வெளியான அறிவிப்பு!!

வானிலை குறித்து வெளியான அறிவிப்பு!!

நாட்டின் வட பகுதியில் தற்போது காணப்படும் காற்றுடன் கூடிய நிலைமை அடுத்த சில நாட்களுக்கும் மேலும் தொடரும் என வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

அதன்படி , மேல், தென், மத்திய, சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக அந்த நிலையம் இன்று காலை வௌியிட்ட செய்தி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேபோல், பதுளை, அனுராதபுரம், வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களில் மிதமான அளவான மழை பெய்யக் கூடும்.

வடக்கு, வடமத்திய, மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60 கிலோ மீற்றர் வரையான அதிகரித்த வேகத்தில் பலத்த காற்று வீசும் என அந்த நிலையம் குறிப்பிட்டுள்ளது.

நாட்டின் ஏனைய பகுதிகளில் மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசும் என வானலை அவதான நிலையம் குறிப்பிட்டுள்ளது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE   

 

About இனியவன்

x

Check Also

ஐஸ் போதைப் பொருளை விழுங்கிய நபர் உயிரிழப்பு!!

ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபரொருவர் உடல்நல குறைவால் உயிரிழந்துள்ளார். 38 வயதான குறித்த நபர் வெல்லம்பிட்டி ...

%d bloggers like this: