Home / Uncategorized / வாட்ஸ்ஆப் குரூப் சாட் ; அட்மினை கொலை செய்த குரூப் மெம்பர்கள்.!

வாட்ஸ்ஆப் குரூப் சாட் ; அட்மினை கொலை செய்த குரூப் மெம்பர்கள்.!

உலகின் முன்னணி சமூக வலைத்தளமான வாட்ஸ்ஆப் தற்போது அதிகளவில் இளைஞர்களால், யுவதிகளாலும் பயன்படுத்தப்பட்டுவருகிறது. தனிப்பட்ட இரு நபர்களுக்கு இடையேயான சாட் வசதி மட்டுமின்றி, பலர் குழுவாக இணைந்து சாட் செய்துகொள்ளும் வசதியும் உள்ளதால் வாட்ஸ்ஆப் நண்பர்களுக்கு இடையே குழு உரையாடல்களுக்கு அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது.

அவ்வாறான குழு உரையாடல் ஒன்றால், அந்த வாட்ஸ்ஆப் குழுவின் அட்மினே கொல்லப்பட்ட சம்பவம் ஹரியானாவில் பரபரப்பினை கிளப்பியுள்ளது. ஹரியானாவின் சோனேபட் பகுதியைச் சேர்ந்த 29 வயதான லவ் ஜோஹர் என்பவர், தன் பகுதியில் உள்ள நண்பர்களைச் சேர்த்து ஒரு வாட்ஸ்அப் குரூப் உருவாக்கியுள்ளார். நெடுநாட்களாக ஜோஹர் என்ற பெயரிலேயே இயங்கி வந்த இந்த குழுவில் சில தினங்களுக்கு முன்னதாக தவறுதலாக தனது புகைப்படத்தினை பதிவேற்றியுள்ளார் குழு அட்மின் லவ்.

இந்த புகைப்படத்தினை வைத்து அவரின் வாட்ஸ்ஆப் குழுவில் உள்ள தினேஷ் என்பவருக்கும் லவ்க்கும் இடையே எழுந்த உரையாடல் மோதலாக மாறி, லவ் தினேஷ் மற்றும் அவரது நண்பர்களால் அடித்துக்கொள்ளப்பட்டுள்ளார். இச்சம்பவத்தால் அப்பகுதி பரபரப்புடன் காரணப்படுகிறது.

About இனியவன்

x

Check Also

நெடுந்தீவு கடலில் மீன்பிடிக்க சென்ற மீனவர்களின் நிலை! சோகத்தில் உறவினர்கள்

நாவாந்­து­றைப் பகு­தி­யி­லி­ருந்து நேற்று முன்­தி­னம் இரவு ஒரு பட­கில் மீன்­பி­டிக்­கப் புறப்­பட்­டுச் சென்ற மூன்று மீன­வர்­க­ளைக் காண­வில்லை என்று யாழ்ப்­பா­ணம் ...

%d bloggers like this: