Home / உள்நாட்டு செய்திகள் / வவுனியாவில் மோட்டார் சைக்கிள் விபத்து – 5 பிள்ளைகளின் தந்தை பலி

வவுனியாவில் மோட்டார் சைக்கிள் விபத்து – 5 பிள்ளைகளின் தந்தை பலி

வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் தச்சுத் தொழிலாளி ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் அவருடன் மோட்டார் சைக்கிளில் சென்ற மேலும் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இன்று காலை 8.30 மணியளவில் வவுனியா, சூடுவெந்தபுலவு பகுதியில் இடம்பெற்ற இவ்விபத்துச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
வவுனியா, சூடுவெந்தபுலவு பகுதியில் சபாரி மோட்டார் சைக்கிளில் தச்சுத் தொழிலுக்குச் சென்ற  துரைச்சாமி திருநாவுக்கரசு என்ற 53 வயது குடும்பஸ்தர் வீதியில் நின்றுஉகொண்டிருந்த கட்டாக்காலி மாட்டுடன் மோதி விபத்துக்குள்ளாகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
அவருடன் மோட்டார் சைக்கிளில் சென்ற பொன்னம்பலம் ஜெயக்குமார் என்ற 48 வயது குடும்பஸ்தர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர்கள் சென்ற மோட்டார் சைக்கிள் வீதியில் நின்றிருந்த கட்டாக்காலி மாட்டுடன் மோதியதாலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

About இனியவன்

x

Check Also

போதைப்பொருள் பாவனை முற்றாக ஒழிக்கப்படும் ஆளுநர் சுரேன் ராகவன்

யாழ்ப்பாணம், நயினை நாகபூஷணி அம்மன் கோவிலுக்கு (புதன்கிழமை) விஜயம் செய்த ஆளுநர் அங்கு வழிபாடுகளில் ஈடுபட்டார். அதன் பின்னர் நாகவிகாரையின் ...

%d bloggers like this: