Home / உள்நாட்டு செய்திகள் / வவுனியாவில் சட்டவிரோத வடிசாராய உற்பத்தி குறித்த நபர்கள் இருவர் கைது

வவுனியாவில் சட்டவிரோத வடிசாராய உற்பத்தி குறித்த நபர்கள் இருவர் கைது

வவுனியா செட்டிகுளம் காவல்துறை பிரிவிற்கு உட்பட்ட மயில் முட்டையிட்ட குளம் பகுதியில் சட்டவிரோத வடிசாராய உற்பத்தியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக செட்டிகுளம் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவவமானது நேற்று மாலை செட்டிகுளம் காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் மயில் முட்டையிட்ட குளம் பிரதேசத்தில் உள்ள காட்டுப்பகுதியில் தேடுதல் நடாத்திய போதே குறித்த நபர்கள் கைது செய்யபட்டனர்.

மேலும் கைது செய்யபட்டவர்களிடம் இருந்து 50 போத்தல் வடிசாராய போத்தல்கள் கைப்பற்றபட்டதுடன் அதனை உற்பத்தி செய்ய பயன்படும் கோடா 180 லீட்டரும், நவீன உபகரணங்களையும் கைப்பற்றியுள்ளனர்.

கைது செய்யபட்டவர்கள் மேலதிக விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் ஆஜர்படுத்தபடவுள்ளதாக காவல்துறையினர் மேலும் தெரிவித்துள்ளனர்.

 

About அகமுகிலன்

x

Check Also

யாழ் காரைநகர் கும்பநாயகி அம்மன் ஆலயக் கொடியேற்றம் இன்று ஆரம்பம்!!

யாழ்ப்பாணம் காரைநகர் மணற்காடு கும்பநாயகி அம்மன் ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் ...

%d bloggers like this: