Home / இந்திய செய்திகள் / வடிவேல் பட காமெடி பாணியில், கிணற்றை காணவில்லை! காவல் நிலையத்தில் போராட்டம்!!

வடிவேல் பட காமெடி பாணியில், கிணற்றை காணவில்லை! காவல் நிலையத்தில் போராட்டம்!!

வடிவேல் பட காமெடி சம்பவம் போல், காணமல் போன கிணற்றை கண்டு பிடித்து தரக்கோரி பொதுமக்கள் திருப்பூர்  வடக்கு காவல் நிலையத்தை முற்றுகையிட்டு மனு அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் திருநீலகண்டபுரம் பகுதியில்  உள்ள கிணற்றை அப்பகுதி  மக்கள் நீண்ட நாட்களாக பயன்படுத்தி வந்துள்ளனர். இந்நிலையில், அப்பகுதியை சேர்ந்த தனியார் ஒருவர் கிணற்றை மூடி அதில் வீடு கட்டும் பணியை செய்து வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் பாதிக்கப்பட்ட அப்பகுதி மக்கள்,  காணாமல் போன கிணற்றை கண்டுபிடித்து தர கோரி திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

இதையடுத்து, போராட்டம் நடத்தியவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய பொலிஸார்‘உங்கள் கோரிக்கையை மனுவாக எழுதிக் கொடுங்கள்; தீர்வு காண்கிறோம்’ எனக் கூறினர். அவர்களும் தங்கள் கோரிக்கையை மனுவாக கொடுத்துவிட்டு, அங்கிருந்து கலைந்து சென்றனர்.

கிணற்றைக் கண்டுபிடித்து தரக்கோரி பொதுமக்கள் போராட்டம் நடத்தியதால், திருப்பூர் வடக்குக் பொலிஸ்  நிலைய வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நீடித்தது.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE

 

 

About அகமுகிலன்

x

Check Also

மும்பையில் நடைபாதை மேம்பாலம் திடீரென இடிந்து விழுந்ததில் 6 பேர் பலி!!

மும்பை சத்ரபதி சிவாஜி புகையிரத நிலையம் அருகேயுள்ள நடைபாதை மேம்பாலம் நேற்று இரவு திடீரென இடிந்து விழுந்ததில் 6 பேர் ...

%d bloggers like this: