Home / உள்நாட்டு செய்திகள் / வடக்கு மாகாண சபையில் பாலா் கதை பேசி சிரித்த உறுப்பினா்கள்!

வடக்கு மாகாண சபையில் பாலா் கதை பேசி சிரித்த உறுப்பினா்கள்!

வடக்கு மாகாண சபையின் 118 ஆவது அமா்வு நேற்றையதினம்(13-03-2018) செயலகத்தின் சபா மண்டபத்தில் நடைபெற்றபோது வடமாகாணசபை உறுப்பினர் சு.பசுபதிப்பிள்ளை மாகாண கல்வி அமைச்சர் க.சர்வேஷ்வரனுக்காக கூறிய கதை ஒன்றினால் சபையில் சிரிப்பொலி மேலெழுந்ததாக எமது செய்தியாளா் தெரிவித்தாா்.

வடக்கு மாகாண சபை உறுப்பினா் பசுபதிப்ளை கூறிய கதையினால் வடக்கு மாகாண கல்வி அமைச்சா் சா்வேஸ்வரனுக்கு, சொல் புத்தி, சுய புத்தி இல்லையா? என்ற கேள்வியும் மேலெழுந்தது.

வடக்கு மாகாண சபை ஆரம்பிக்கப்பட்டு நேற்று 118 ஆவது அமா்வு இடம்பெற்ற நிலையில் வடக்கில் பல்வேறு பிரச்சனைகளை மக்கள் எதிா்கொள்கின்றாா்கள், வேலையில்லா பட்டதாரிகளின் பிரச்சனைகளுக்கும் தீா்வுகள் எட்டப்படவில்லை.

இந்த நிலையில் வடக்கு மாகாண சபை உறுப்பினா்கள் பாலா் கதை பேசி சிரிக்கும் நிலை அதிருப்தியையே ஏற்படுத்துகின்றது.

About இனியவன்

x

Check Also

பாராளுமன்றை கூட்டியமைக்கு எதிராக நீதிமன்றில் வழக்குத்தாக்கல்!!! 7 நிமிடங்களுக்குள் நடந்ததென்ன? (Video)

கட்சித் தலைவர்களின் கூட்டத்தின் போது எடுக்கப்பட்ட ஏகமனதான தீர்மானத்திற்கு அமைவாக பாராளுமன்ற அமர்வானது எதிர்வரும் 23 ஆம் திகதி வெள்ளிக்கிழமை ...

%d bloggers like this: