Home / உள்நாட்டு செய்திகள் / லங்கா ஐ.ஓ.சி பெற்றோல், டீசல் விலைகளில் மாற்றம்!

லங்கா ஐ.ஓ.சி பெற்றோல், டீசல் விலைகளில் மாற்றம்!

நேற்று நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
மாதாந்தம் மேற்கொள்ளப்பட்டு வரும் எரிபொருள் விலைக்கு அமைய இந்த அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதேவேளை, லங்கா ஐ.ஓ.சி நிறுவனமும் எரிபொருள் விலையை அதிகரித்துள்ளது.

அதற்கமைய, ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 4 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய அதன் புதிய விலை, 103 ரூபாவாகும்.

ஒக்டேயின் 95 ரக பெற்றோலின் விலை 5 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்த அதிகரிப்புக்கு அமைய அதன் புதிய விலை 155 ரூபாவாக அறவிடப்படவுள்ளது.

அத்துடன், சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 8 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை, 126 ரூபாவாகவுள்ளது.

அத்தோடு ஒக்டேயின் 92 ரக பெற்றோலின் விலையில் மாற்றங்கள் மேற்கொள்ளப்படவில்லை என ஐ.ஓ.சி நிறுவனம் அறிவித்துள்ளது

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்

LIKE-Facebook

 

About அகமுகிலன்

x

Check Also

அனுமதி பத்திரங்கள் இல்லாமல் மணல் ஏற்றிய இருவர் கைது!!

திருகோணமலை, கந்தல்காடு பகுதியில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின்  போது அனுமதி பத்திரங்கள் இல்லாமல் மணல் ஏற்றிய 02 பேரை கடற்படையினர் கைது ...

%d bloggers like this: