Home / விளையாட்டுச் செய்திகள் / ரி-20 தொடரை கைப்பற்றியது இந்தியா RADIOTAMIZHA

ரி-20 தொடரை கைப்பற்றியது இந்தியா RADIOTAMIZHA

சுற்றுலா இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ரி-20 போட்டியில் 78 ஓட்டங்களினால் அசத்தல் வெற்றி பெற்ற இந்திய அணி 2-0 என்று தொடரை கைப்பற்றியுள்ளது.

இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 201 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

அவ்வணி சார்பாக ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான சிகார் தவான் 52 ஓட்டங்களையும் மற்றும் கே.எல் ராகுல் 54 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றனர்.

பந்து வீச்சில் லக்ஷன் சந்தகன் 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

இந்நிலையில் 202 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி ஆடிய இலங்கை அணி 15.5 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 223 ஓட்டங்களை மட்டும் பெற்று தோல்வி அடைந்தது.

இதன்போது துடுப்பாட்டத்தில் தனஞ்சய டி சில்வா 57 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார். இந்திய அணியின் பந்துவீச்சில் நவதீப் சைனி 3 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

தோனியின் பெயர் இல்லாத பிசிசிஐ கிரிக்கெட் வீரர்கள் ஒப்பந்த பட்டியல் RADIOTAMIZHA

இந்திய கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ள நடப்பு ஆண்டிற்கான வீரர்கள் ஒப்பந்த பட்டியலில் அணியின் முன்னாள் தலைவர் மகேந்திர சிங் தோனியின் ...

%d bloggers like this: