Home / இந்திய செய்திகள் / ராகுல் காந்தி உருக்கம்! அப்பாவை கொன்றவர்களை மன்னித்துவிட்டேன்!

ராகுல் காந்தி உருக்கம்! அப்பாவை கொன்றவர்களை மன்னித்துவிட்டேன்!

காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி தனது அப்பாவை கொண்றவர்களை மன்னித்துவிட்டடடடடதாக தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூரிற்கு விஜயம் செய்துள்ள காஙகிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார்.

அப்போது அவர் தனது தந்தையும் முன்னாள் பிரதமருமான ராஜிவ் காந்தி படுகொலை செய்யப்பட்டது குறித்து கூறுகையில் :- பல ஆண்டுகளாக நானும் எனது சகோதரி பிரியங்காவும் எங்கள் தந்தையை கொன்றவர்கள் மீது கடும் கோபத்தில் இருந்தோம். மன வேதனையில் இருந்து எங்களால் மீள முடியவில்லை. ஆனால் தற்போது அவர்களை முற்றிலுமாக மன்னித்து விட்டோம் என தெரிவித்துள்ளார்.

ராகுலின் இந்த பதிலை கேட்டு அங்கு கூடி இருந்த அனைவரும் பலத்த கரகோஷம் எழுப்பியுள்ளனர்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் :- அரசியலில் எடுத்த சில நிலைப்பாடுகளுக்காக எங்கள் குடும்பம் கொடுத்த விலை தான் எனது பாட்டி இந்திரா மற்றும் தந்தை ராஜிவின் படுகொலை.

அரசியலில் தவறான உந்துதலால் ஒரு விஷயத்தின் பின்னால் நின்றால் நீங்கள் மரணிப்பீர்கள். எங்களுக்கு தெரியும் எங்கள் பாட்டியும் தந்தையும் இறந்து போவார்கள் என்று. என் தந்தையும் தானும் கொல்லப்படுவோம் என எனது பாட்டி என்னிடம் கூறினார். அவர் கூறியது போல் எனது தந்தையும் பாட்டியும் கொலலப்பட்டனர். என்னுடன் பாட்மின்டன் விளையாடிவர்களே எனது பாட்டியை 1984 இல் கொண்றார்கள்.

2016 இல் எனது தந்தை கொல்லப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 7 பேரையும் விடுதலை செய்ய ஜெயலலிதா பரிந்துரைத்தார். ஆனால் காங்கிரஸ் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. அது அரசின் நிலைப்பாடு அதில் எனது தனிப்பட்ட கருத்தை கூற முடியாது. எனது தந்தை கொல்லப்பட்ட பிறகு பாதுகாப்பு சூழலே மாறி விட்டது. காலை, பகல், இரவு என எப்போதும் 15 பேர் சூழ்ந்திருக்க வேண்டிய நிலைக்கு ஆளானேன்.

2009 ஆம் ஆண்டு பிரபாகரன் இறந்ததை தொலைக்காட்சியில் பார்த்தேன். அப்போது இரண்டு விதமான உணர்வுகள் என் மனதில் எழுந்தது. ஒன்று இவரை ஏன் இப்படி அவமானப்படுத்துகிறார்கள். இரண்டாவது அவரின் குடும்பம் மற்றும் குழந்தைகளை நினைத்து மிகவும் வேதனைப்பட்டேன்.

நான் ஏன் அவ்வாறு உணர்ந்தேன் என தெரியவில்லை. உடனே பிரியங்காவை தொலைபேசியில் தொடர்புகொண்டு உரையாடினேன். அவர் நமது அப்பாவை கொன்றவர். அவர் இறந்ததற்காக சந்தோஷப்பட வேண்டும். ஆனால் என்னால் சந்தோஷப்பட முடியவில்லை. ஏன் என்னால் சந்தோஷப்பட முடியவில்லை என தெரியவில்லை என்றேன். நானும் அதே மனநிலையில் தான் இருக்கிறேன் என பிரியங்கா என்னிடம் தெரிவித்தார். என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

About இனியவன்

x

Check Also

காயமடைந்த செய்தியாளரின் மனதை உருக்கும் வீடியோ!

சத்தீஸ்கரியில் செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர் தீவிரவாத தாக்குதலை காயமடைந்ததையடுத்து தனது அம்மாவுக்கு உருக்கமான வீடியோவை ஒன்றை வெளியிட்டுள்ளார். சத்தீஸ்கரில் ...

%d bloggers like this: