Home / உலகச் செய்திகள் / ரஷ்யா மீது தடை விதிக்கும் அமெரிக்கா

ரஷ்யா மீது தடை விதிக்கும் அமெரிக்கா

ரஷ்யா மீது மேலும் பல புதிய தடைகளை விதிக்கவுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

ரஷ்யாவின் முன்னாள் உளவுப் பிரிவு அதிகாரி சேர்கெய் ஸ்கிரிபால் மற்றும் அவரது மகள் யூலியா மீது, கடந்த மார்ச் மாதம் இரசாயன நச்சுவேதிப்பொருள் தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்தத் தாக்குதலுடன் ரஷ்யாவுக்கு நெருங்கிய தொடர்பு காணப்படுவதாக பிரித்தானிய குற்றப்புலனாய்வு விசாரணைப் பிரிவினர் குற்றஞ்சாட்டியுள்ளனர். ஆனால், குற்றச்சாட்டை மொஸ்கோ உறுதியாக மறுத்துள்ளது.

இந்த விடயத்தில், ரஷ்யா மீதான மேலும் பல புதிய தடைகளை விதிப்பதற்குத் தீர்மானித்துள்ளதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம்  வௌியிட்ட அறிக்கையொன்றினூடாக தெரிவித்துள்ளது.

About இனியவன்

x

Check Also

கூகுள் பணியாளர்கள் பணிப்புறக்கணிப்பு

பாலியல் குற்றச்சாட்டுகளை கையாளும் கூகுள் நிறுவனத்தின் அணுகுமுறையை கண்டித்து உலகம் முழுவதுமுள்ள அந்நிறுவன பணியாளர்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பாலியல் ...

%d bloggers like this: