Home / உலகச் செய்திகள் / யோஷிஹைட் சுகா ஜப்பானின் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார்

யோஷிஹைட் சுகா ஜப்பானின் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார்

உடல் நிலைக் குறைவினால் இராஜினாமா செய்த ஷின்சோ அபேவுக்கு பதிலாக ஜப்பானின் அடுத்த பிரதமராக யோஷிஹைட் சுகா அந் நாட்டு பாராளுமன்றத்தினால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

திங்களன்று ஆளும் லிபரல் டெமாக்ரடிக் கட்சியின் (எல்.டி.பி) தலைமைப் போட்டியில் ஸ்ட்ராபெரி விவசாயியின் மகனான சுகா (வயது 71) வெற்றி பெற்றார்.

இந் நிலையில் இன்று புதன்கிழமை பாராளுமன்ற வாக்கெடுப்பில் அவரது பெரும்பான்மை உறுதிப்படுத்தப்பட்டதையடுத்தே அவர் ஜப்பானின் அடுத்த பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

அபேயின் நெருங்கிய நண்பரான புதிய பிரதமர் முன்னோடி கொள்கைகளைத் தொடருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உடல்நலக்குறைவு காரணமாக ஷின்சோ அபே கடந்த மாதம் தனது இராஜினாமாவை அறிவித்தார்.

முன்னதாக புதன்கிழமை, அபே தனது இறுதி அமைச்சரவைக் கூட்டத்தை நடத்தி செய்தியாளர்களிடம் தனது கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகள் ஆட்சியில் இருந்த சாதனைகள் குறித்து பெருமைப்படுவதாகவும் கூறினார்.

About VITHUSHA

x

Check Also

பெட்ரோல் கொள்கலன் லொறி கவிழ்ந்து தீப்பிடித்ததில் 23பேர் உயிரிழப்பு

நைஜீரியாவின் மத்திய மாநிலமான கோகி நகரில் ஒரு பரபரப்பான வீதியில் பெட்ரோல் கொள்கலன் லொறி கவிழ்ந்து தீப்பிடித்ததில் 23பேர் உயிரிழந்துள்ளனர். ...