Home / உள்நாட்டு செய்திகள் / யாழ் பல்கலைக்கழக மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கை 22 ஆம் திகதி ஆரம்பம்!

யாழ் பல்கலைக்கழக மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கை 22 ஆம் திகதி ஆரம்பம்!

யாழ் பல்கலைக்கழகத்தின் மருத்துவபீடம் தவிர்ந்த அனைத்து பீடங்களையும் சேர்ந்த மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் யாவும் எதிர்வரும் புதன்கிழமை ஆரம்பமாகவுள்ளன என பதிவாளர் வி. காண்டீபன் அறிவித்துள்ளார்.

கலைப்பீடம் (இராமநாதன் நுண்கலைப்பீடம் உட்பட), விஞ்ஞானபீடம், முகாமைத்துவ மற்றும் வணிகபீடம், விவசாயபீடம், பொறியியற்பீடம், தொழில்நுட்பபீடம், ஆகிய பீடங்களுக்கும் சித்தமருத்துவ அலகுக்குமான கல்வி நடவடிக்கைகளே எதிர்வரும் 22 ஆம் திகதி புதன்கிழமை ஆரம்பிக்கப்படவுள்ளன.

கடந்தஏப்ரல்21ஆம் திகதி முதல் நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட பரீட்சைகளில் மருத்துவபீடம் தவிர்ந்த ஏனைய பீடங்கள் அனைத்துக்குமான பரீட்சைகள் எதிர்வரும் 27 ஆம் திகதி திங்கட்கிழமையிலிருந்து ஆரம்பமாகி நடைபெறவுள்ளன.

 

About இனியவன்

x

Check Also

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் பாதுகாப்பு சோதனைக்கு தன்னியக்க இயந்திரம்!!

யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்துக்கு வருபவர்களை பாதுகாப்புக்கா சோதனை செய்வதற்கு தன்னியக்க இயந்திரம் ஆலயத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. வடக்கு மாகாண ...

%d bloggers like this: