Home / உள்நாட்டு செய்திகள் / யாழ் நூலகத்தில் தமிழர்களின் வரலாற்றை அழிக்க சதி? விழித்துக்கொண்ட மாநகரசபை

யாழ் நூலகத்தில் தமிழர்களின் வரலாற்றை அழிக்க சதி? விழித்துக்கொண்ட மாநகரசபை

யாழ். பொது நூலகத்தின் கல்வெட்டில் காணப்படும் பிழையான வரலாற்றினை மாற்றியமைக்க நடவடிக்கை நேற்று எடுக்கப்பட்டுள்ளது.

யாழ் பொது நூலகத்தின் வரலாறானது, குறித்த நூலக வாயில் கல்வெட்டில் பதியப்பட்டுள்ளது.

எனினும் அதில் பொறிக்கப்பட்டுள்ள வரலாற்று குறிப்பில் பிழைகள் இருப்பதாக எமது முன்னோர்களும் சபை உறுப்பினர்களும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதனால் இந்த பிழையை திருத்தியமைக்க வேண்டுமென மாநகர சபையில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

குறித்த தீர்மானத்தின் பிரகாரம் நூலக வரலாற்றில் பிழையான தகவல்கள் திணிக்கப்பட்டுள்ளனவா? என ஆராய குழுவொன்று அமைக்கப்பட்டு, குறித்த கல்வெட்டில் பிழை உள்ளதாக இனங்காணப்பட்டுள்ளது.

அதற்கமைய நூலக வரலாற்றை திருத்தியமைப்பதற்கான பூர்வாங்க பணிகள் இடம்பெற்று வருகின்றன இதேவேளை நூலகம் எரிக்கப்பட்டு 38 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் அண்மையில் நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் கலந்து கொண்ட யாழ் மாநகர முதல்வர் இ.ஆர்னோல்ட் மிகவிரைவில் வரலாறுகள் திருத்தி அமைக்கப்படும் என உறுதியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

About இனியவன்

x

Check Also

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் பாதுகாப்பு சோதனைக்கு தன்னியக்க இயந்திரம்!!

யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்துக்கு வருபவர்களை பாதுகாப்புக்கா சோதனை செய்வதற்கு தன்னியக்க இயந்திரம் ஆலயத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. வடக்கு மாகாண ...

%d bloggers like this: