Home / உள்நாட்டு செய்திகள் / யாழ் கொக்குவில் இந்துக் கல்லூரி ஆசிரியர் மீது தாக்குதல் – கவனயீர்ப்பு கண்டன போராட்டம்!

யாழ் கொக்குவில் இந்துக் கல்லூரி ஆசிரியர் மீது தாக்குதல் – கவனயீர்ப்பு கண்டன போராட்டம்!

யாழ்ப்பாணம் கொக்குவில் இந்துக் கல்லூரியின் ஆசிரியர் ஒருவர்   தாக்கப்பட்டதைக் கண்டித்து ஆசிரியர்கள் நேற்று கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர். கல்லூரியின் மாணவ ஒழுக்க கட்டுப்பாட்டு ஆசிரியரான பிரதீபன் எனும் ஆசிரியரே முன்தினமிரவு தாக்கப்பட்டிருந்தார். இத் தாக்குதலைக் கண்டித்து கல்லூரியின் நுழைவாயிலில் ஆசிரியர்கள் அனைவரும் இணைந்து நேற்று காலை 8 மணி முதல் இப் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

இதன் போது தாக்கப்பட்ட ஆசிரியருக்கு நீதி வேண்டுமென்றும் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டுமென்றும் ஆசிரியர்களது பாதுகாப்புக்கள் உறுதிப்படுத்தப்பட வேண்டுமெனவும் போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

 

About இனியவன்

x

Check Also

யாழ். கோட்டையில் மீட்கப்பட்ட எலும்புக்கூட்டில் தங்க மோதிரம்!!

யாழ்ப்பாணம் கோட்டை உட்பகுதியில் மீட்கப்பட்ட மனித எலும்புக்கூட்டில் இருந்து S.A எனும் எழுத்துப் பொறிக்கப்பட்ட தங்க மோதிரம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. ...

%d bloggers like this: