Home / உள்நாட்டு செய்திகள் / யாழ்ப்பாணத்தின் பல நாள் கள்ளன் பிடிபட்டான் புகைப்படங்கள் உள்ளே

யாழ்ப்பாணத்தின் பல நாள் கள்ளன் பிடிபட்டான் புகைப்படங்கள் உள்ளே

யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளிலும் தொடர்ச்சியாக வழிப்பறி மற்றும் சங்கிலி அறுப்பில் ஈடுபட்டு  வந்த கொள்ளையர் ஒருவரை சாவகச்சேரி பொலிஸார் நேற்று இரவு கைது செய்துள்ளனர்.

யாழ்ப்பாணம் மற்றும் தென்மராட்சியின் பல்வேறு பகுதிகளிலும் வழிப்பறி மற்றும் தங்கச்சங்கிலி அறுப்பு போன்றன அண்மைக்காலங்களில் தொடர்ச்சியாக இடம்பெற்று  வந்த நிலையில் இவ்வழிப்பறி தொடர்பாக விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் கொள்ளையர் ஒருவரை அதிரடியாக கைது செய்துள்ளனர்.

மேலும் வழிப்பறி கொள்ளைக்கு பயன்படுத்தப்பட்டு வந்த மோட்டார் சைக்கிள் ஒன்றையும் உருக்கி வைக்கப்பட்டிருந்த ஆறு பவுண் தங்கத்தையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.

மாவட்ட குற்றப்புலனாய்வு பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் ஜே.ஜெயறோசனுக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய அரியாலைப் பகுதியில் மறைந்திருந்த கொள்ளையனை உபபொலிஸ் பரிசோதகர் இ.சேந்தன் தலைமையிலான பொலிஸ் குழுவினர் கைது செய்துள்ளனர்.

மேலும் கொள்ளையருக்கு எதிராக சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் மூன்று முறைப்பாடுகள் உள்ளதாகவும் விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர்.

 

About அகமுகிலன்

x

Check Also

போதைப்பொருள் பாவனை முற்றாக ஒழிக்கப்படும் ஆளுநர் சுரேன் ராகவன்

யாழ்ப்பாணம், நயினை நாகபூஷணி அம்மன் கோவிலுக்கு (புதன்கிழமை) விஜயம் செய்த ஆளுநர் அங்கு வழிபாடுகளில் ஈடுபட்டார். அதன் பின்னர் நாகவிகாரையின் ...

%d bloggers like this: