Home / சினிமா செய்திகள் / மூன்று பாகங்களில் தயாராக உள்ள ‘ராமாயணா’

மூன்று பாகங்களில் தயாராக உள்ள ‘ராமாயணா’

இந்தியத் திரையுலகில் ‘பாகுபலி’ படத்தின் இரண்டு பாகங்கள் கொடுத்த வெற்றி, வசூல் ஆகியவற்றைத் தொடர்ந்து ராமாயணம், மகாபாரதம் ஆகிய படங்களைத் தயாரிக்க சில தயாரிப்பாளர்கள் முயற்சி செய்தார்கள். ஆனால், அவற்றில் சில அறிவிப்பு அளவிற்குக் கூட வரவில்லை.

இப்போது ‘ராமாயணம்’ படத்தைத் தயாரிக்கப் போவதாக தெலுங்கு, ஹிந்தித் தயாரிப்பாளர்கள் அறிவித்துள்ளனர். தெலுங்கின் பிரபலமான தயாரிப்பாளர் அல்லு அரவிந்த், ஹிந்தித் தயாரிப்பாளர்களான மது மந்தெனா, நமித் மல்கோத்ரா ஆகியோருடன் இணைந்து ‘ராமாயணா’ படத்தைத் தயாரிக்க உள்ளதாக அறிவித்துள்ளார்கள்.
Ramayana-to-be-made-in-Three-Language
ஆமீர்கான் நடித்த ‘தங்கல்’ படத்தின் இயக்குனர் நிதேஷ் திவாரி, ஸ்ரீதேவி நடித்த ‘மாம்’ படத்தின் இயக்குனர் ரவி உட்யவார் ஆகிய இருவரும் இப்படத்தை இயக்க உள்ளார்கள். தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் இப்படம் தயாராக உள்ளது. இந்திய அளவில் இதற்காக நட்சத்திரத் தேர்வு செய்ய உள்ளார்கள். மூன்று பாகங்களில் தயாராக உள்ள இப்படத்தின் முதல் பாகத்தை 2021ம் ஆண்டில் வெளியிட உள்ளார்கள்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE   

About இனியவன்

x

Check Also

பிக் போஸ்க்கு வரும் அடுத்த போட்டியாளர்– Wild Card

கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் 3 இல் இருந்து வனிதா வெளியேறிய நிலையில், அடுத்து வைல்ட் கார்டினுடே நடிகர் ...

%d bloggers like this: