Home / உள்நாட்டு செய்திகள் / முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்டவர்கள் நினைவாக மரநடுகை!!

முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்டவர்கள் நினைவாக மரநடுகை!!

முள்ளிவாய்கால் பகுதியில் உயிர் நீத்த மக்களின் 10 ஆவது வருட நினைவேந்தல் நிகழ்வை முன்னிட்டு, தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகள் மற்றும் பொது நிறுவனங்கள், வைத்திய சாலைகளில் மரநடுகை செய்யும் திட்டம் நேற்றைய தினம் ஆரம்பிக்கப்பட்டது.

மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் ஏற்பாட்டில் வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் அனுசரனையில் இந்தத் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மன்னார் , வவுனியா , கிளிநொச்சி, முல்லைதீவு , மட்டக்களப்பு, திருகோணமலை ,அம்பாறை ஆகிய தமிழர் வாழும் பகுதிகளின் மரங்கள் நடுகை செய்யப்படவுள்ளது.

கிளிநொச்சி பகுதியில் உள்ள சில பாடசாலைகள் மற்றும் மீனவர் சமாசம் உட்பட பூநகரி பிரதேச வைத்திய சாலையில் இன்று மரங்கள் நடுகை செய்யப்பட்டன.

 

About இனியவன்

x

Check Also

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் பாதுகாப்பு சோதனைக்கு தன்னியக்க இயந்திரம்!!

யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்துக்கு வருபவர்களை பாதுகாப்புக்கா சோதனை செய்வதற்கு தன்னியக்க இயந்திரம் ஆலயத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. வடக்கு மாகாண ...

%d bloggers like this: